அந்த இளம் பெண்ணின் பெயர் பீபியா. அவளுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதிகள், அரசாங்கத்திடம் 'கருணை மனு' சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்தார்கள்.
இந்த நிகழ்வு இயல்பான ஒன்றுதான்.
இதன் பின்னணியோ நம்மைக் பேரதிர்ச்சிக்கும் கடும் வேதனைக்கும் உள்ளாக்க வல்லதாக உள்ளது.
அந்தப் பெண் ஐந்து வயதிலேயே திருமணம் முடிக்கப்பெற்று, கணவனை இழந்து 'விதவை' என்னும் அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்டவள்; கணவன் வீட்டிலேயே வாழ்ந்தவள். பருவம் எய்திய பின்னர் அந்தக் குடும்ப உறுப்பினராலேயே கர்ப்பிணி ஆக்கப்பட்டவள். இந்தச் சூழ்நிலையில்தான், ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதைக் குழி தோண்டிப் புதைத்த சோகமும் நிகழ்ந்தது.
நீதிபதிகளால் தண்டிக்கப்பட்டாள் அவள். அவளைக் கர்ப்பிணி ஆக்கியவன் தண்டிக்கப்படவில்லை.
கல் நெஞ்சுடன் ஆணினம் தங்களுக்குக் காலங்காலமாகச் செய்த வஞ்சகத்தைப் பெண்கள் மறக்காமலும், துறவு மனத்துடன் மணம் புரிய மறுத்தும் வாழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட மனித இனம் பூண்டோடு அழிந்து காணாமல் போயிருக்கும்.
இப்படியொரு அவலம் நேராதிருந்தமைக்குக் காரணம்.....
'பெண்களுக்கு மறதியும் மன்னிக்கும் உயர் குணமும் அதிகம்! மிக மிக மிக... அதிகம்' என்பதுதான்!!!
==========================================================================
-குடி அரசு - செய்திக் குறிப்பு - 11.08.1929