அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 13 நவம்பர், 2021

"போகாதே... போட்டுத்தள்ளு"


#கோவையில் பள்ளி ஆசிரியர் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர்[மாணவி] எழுதியுள்ள கடிதம் ஒன்று காவல்துறையால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது#

இது, 'நக்கீரன்' தளத்தில் இன்று வெளியான செய்தி[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/teacher-arrested-coimbatore-school-student-case    Published on 13/11/2021 (07:36) | Edited on 13/11/2021 (09:17)

பதின்பருவம்[Teenage] என்பது எளிதில் உணர்ச்சிவசப்படுவதும், அதன்  பின்விளைவுகள் குறித்துச் சிந்தித்து அறியும் 'மனப்பக்குவம்' அற்றதும் ஆகும்.

இப்பருவ வயது மாணவிகளை, அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே பாலுறவுக்கு உள்ளாக்குவதும், அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடுவதுமான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் ஒரு கூடுதல் நிகழ்வைத்தான் நக்கீரன் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்த அப்பாவி மாணவி தற்கொலை புரிவதைத் தவிர்த்திருக்கலாம். 

புனிதமானது கற்பிக்கும் தொழில் என்பதை மறந்த ஒரு கழிசடையின் இழிசெயலால், சம்பந்தப்பட்ட மாணவியின் உடல்நிலையைக் காட்டிலும் மனநிலை அதிகம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இனியும் படிப்பில் கவனம் செலுத்த இயலாது என்று அவள் எண்ணியதும், இந்தச் சம்பவத்தால் தன் எதிர்காலம் சூனியம் ஆகிவிட்டதாக நம்பியதும், பெற்றோருக்குச் சுமையாக இருத்தல் வேண்டாம் என்று முடிவெடுத்ததும் போன்ற காரணங்களால் தவிர்ப்பது முடியாமல் போயிருக்கலாம்.

பொதுவாக, பெண்ணைப் பெற்றவர்களும், உற்றார் உறவினரும், காவல்துறையும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் குற்றவாளி எந்த அளவுக்குத் தண்டிக்கப்படுவான் என்பதை முன்கூட்டியே அனுமானிப்பது சாத்தியமில்லை.

இந்த அபலையைப் போல, அறியாமை காரணமாக, இனி வாழ்ந்து பயனில்லை என்று முடிவெடுக்கும் மாணவிகள், தற்கொலைக்கு மாறாக, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் அயோக்கியர்களைக் கத்தியால் குத்தியோ, தடியால் அடித்தோ தீர்த்துக்கட்டுவது வரவேற்கத்தக்கது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆயினும்.....

இதற்கான துணிச்சலும், பின்விளைவை எண்ணிக் கலங்காதிருக்கும் மன திடமும் பதின்பருவ மாணவிகளுக்கு வாய்க்காது என்பதை எண்ணும்போது மனம் வெகுவாகக் கனத்துப்போகிறது.

==========================================================================