அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 18 நவம்பர், 2021

'ஜெய் பீம்' சூரியாவுக்கு அன்பானதும் அவசரமானதுமான புத்திமதி!!!

(இப்பதிவு எழுதப்பட்ட சூழ்நிலை வெகுவாக மாறிவிட்ட நிலையில், இப்பதிவின் உட்கருத்துக்கு மாறான கருத்துகள் அடங்கிய வேறு சில பதிவுகள் பின்னர் எழுதப்பட்டுள்ளன என்பதை அறிந்திடுக. நன்றி.)

மதிப்பிற்குரிய சூரியா அவர்களுக்கு, வணக்கம்.

உங்களின் 'ஜெய் பீம்' திரைப்படத்தில், தவறு நேர்ந்ததாகச் சொல்லப்படும் 'வன்னியத் தமிழர்கள்' தொடர்பான காட்சியமைப்புகளில்  ஒன்று 'அக்கினிக் கலசம்' படத்துடனான நாட்குறிப்பு. அதை அகற்றியது வரவேற்கத்தக்கதே.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'[Yaathoramani.blogspot.com]  என்னும் வலைத்தளத்தில் 'சூரியாத்தனம்...' என்னும் தலைப்பில் இன்று ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அதில்.....

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த வேறு சில தவறுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் அதன் உரிமையாளர். தரமானதும் பயனுள்ளதுமான பல பதிவுகளைத் தந்த/தந்துகொண்டிருக்கும் பதிவர் அவர்.

பட்டியல்:


மேற்கண்டவாறு தவறுகளைச் சுட்டிக்காட்டியதோடு, 'வில்லன் பெயரை மாற்றாமல் பம்மாத்து செய்ய வேண்டாம்' என்றும்  அவர் கூறியிருக்கிறார்.

இவர் குறைபட்டுக்கொள்வதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே, 'பாமக' கொடி, துண்டு, ராமதாஸ் ஐயா படம் ஆகியவற்றை 'ஜெய் பீம்' திரைப்படத்திலிருந்து உடனடியாக நீக்கிவிடுங்கள்; வில்லன் பெயரை மாற்றவும் நடவடிக்கை எடுங்கள். கூடவே அவர்கள் இழப்பீடாகக் கேட்கும் ரூபாயைக் கொடுத்து மன்னிப்பும் கேளுங்கள். தவறினால்.....

அவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் உள்ள திரையரங்குகளில் 'ஜெய் பீம்' படத்தைத் திரையிட்டுக் காசு பார்ப்பதென்பது குதிரைக் கொம்புதான் என்பது என் எண்ணம்[இது தவறானதாகவும் இருக்கலாம்]. 

மன்னிப்புக் கேட்பதெல்லாம் உங்களின் தன்மானத்துக்குப் பங்கம் விளைவிக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்தவொரு சூழலில் உங்களுக்கு நான் சொல்ல விரும்பும் புத்திமதி ஒன்று உண்டு.

திரைப்படக் காட்சிகளைப் படமாக்கும்போது.....

படப்பிடிப்பு நடைபெறுகிற வீதிகளிலோ, தெருக்களிலோ எந்தவொரு கட்சித் தலைவரின் பெயர் பொறிப்போ, சுவரொட்டியோ, கட்சிக் கொடியோ, அவர்கள் தொடர்பான வேறு சின்னங்களோ 'இல்லவே இல்லை' என்பதைத் தேடிக் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.

'படப்பிடிப்பு நிகழ்த்தும் இடங்களில் மேற்கண்ட பிரச்சினைக்குரிய அம்சங்கள் ஏதுமில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு படம் பிடிப்பது நடைமுறை சாத்தியமல்ல' என்று நீங்களும் உங்களைப் போன்ற படத் தயாரிப்பாளர்களும் சொல்லக்கூடும்.

அதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, உங்களின் இயல்புக்கு உகந்த தொழில் அல்ல இது என்பதே என் கணிப்பு.

ஆகவே சூரியா அவர்களே, 

சமுதாயத்தைத் திருத்துகிறேன்; அடித்தள மக்களின் வாழ்வை மேம்படுத்துகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரைப்படம் தயாரிக்கும் எண்ணைத்தை அறவே துடைத்தெறியுங்கள். 

இனி, படங்களில் நடிப்பது மட்டுமே உங்களின் தொழிலாக இருக்கட்டும். முடிந்தால், அதில் கிடைக்கும் வருமானத்தில் கணிசமானதொரு தொகையை ஏழை எளியோருக்கு உதவும் வகையில் செலவு செய்து மன உளைச்சலின்றி வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள்.

வாழ்த்துகள்!       

                                         *  *  *                           குறிப்பு: உங்களைவிடவும் வயதில் மிக மூத்தவன் என்ற முறையில் 'புத்திமதி' என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறேன். இதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக, 'பரிந்துரை' என்பதை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
                                        *  *  *

'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு எதிராக வன்னியர் சங்கங்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து, பேராசிரியர் சுந்தரவல்லி அவர்கள் 'நக்கீரன்' தளத்துக்கு அளித்த பேட்டியின் 'காணொலி" கீழே[அண்மையில் வெளியானது]:

==========================================================================
நன்றி: சக பதிவரின் பதிவை[Yaathoramani.blogspot.com], அவர் பொருட்படுத்தமாட்டார் என்னும் நம்பிக்கையில் அவரின் அனுமதி இல்லாமல் எடுத்தாண்டிருக்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

*  *  *

#'தீதும் நன்றும் பிறர் தர வாரா'

'சூரியாத்தனம்.....'
நிச்சயமாக சூரியா தெரிந்தே இத்தனையும் செய்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம்.இனியும் வில்லன் பெயரை மாற்றாது பம்மாத்து செய்து கொண்டிருந்தால் எம்மைப் போன்ற நடுநிலையாளர்கூட எரிச்சல் கொள்ளுதல் தவிர்க்க இயலாதது..இந்த விசயத்தில் கிடைத்த ஒரே ஒரு லாபம் சைகைக் காட்டியதும் ரொட்டி போட்டதும் குரைக்கக் கூடியவைகளை அடையாளம் காண முடிந்ததே..(அனைவரின் உண்மைப் பெயரைப் பதிவு செய்ததைப் போலவே வில்லன் பெயரையும் பதிவு செய்திருக்கலாம்..அல்லது அனைவரின் உண்மைப் பெயர்களையும் தவிர்த்திருக்கலாம்.செய்திருந்தால் யதார்த்தமாய் தெரிந்திருக்க வேண்டிய இந்தக் காட்சிகளை கூர்ந்து கவனிக்கத் தோன்றாது.மாறாக.ஆதிக்க இனத்தால் அதிகார வர்க்கத்தால் அன்றாடம் இன்றும் அல்லல்படுகிற பாமர மக்கள் குறித்த அற்புதமான படம் இது போன்ற குள்ள நரித்தனத்தால் குரங்காய் முடிந்திருக்கிறது..)#
==========================================================================