அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 30 நவம்பர், 2021

'அது' விசயத்தில் அட்டகாசச் சலுகைகள் வழங்கும் நாடுகள்!!!


*'கருத்தரித்த பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான குழந்தைப் பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்படும்'[கன்னியரின் 'கட்டழகு'ப் பராமரிப்புக்கான பொருள்களும் வழங்கப்படுதல் வேண்டும்].

*"உங்களுக்காக அல்ல, நாட்டுக்காகக் குழந்தை பெறுங்கள்(பெறுபவர்களுக்குத் 'தியாகிகள்' பட்டம் வழங்கலாம்)"

*'ஆண்கள் இளம் வயதிலேயே இறக்கிறார்கள். எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவை நாட்டை முடக்குகின்றன. இவை காரணமாகப் பெண்கள் குழந்தை பெறுவது மிகவும் குறைந்துவிட்டது. அதை அதிகரிப்பதற்காக, 'செப்டம்பர் 12' கருத்தரிக்கும் நாளாக அறிவிக்கப்படுகிறது, 

*'இது விசயத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டும்'[இதுவல்லவோ நாடு! இதுவல்லவோ அரசு!!]

*'குழந்தை பெறுவது மிகவும் குறைந்துவிட்டதால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு 20% வருமான வரி விதிக்கப்படும்; விவாகரத்துக்கு இனி அனுமதியில்லை'['சின்ன வீடு' வைத்துக்கொள்ள அனுமதி உண்டா!]  

*'சிறிய' படுக்கை அறைகள் மட்டுமே குடியிருப்புகளில் கட்டப்பட வேண்டும்' ['சிங்கிள்' கட்டில்தான் போட முடியும். தம்பதியர் ஒன்றாகப் படுத்தாக வேண்டும் என்பது புரிகிறது. கட்டிலுக்கு அடியில் படுக்கை விரிக்கும் ஆண்களை என்ன செய்வது?!]

*'ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்'[பாராட்டுக் கூட்டங்களும் நடத்தலாம்].  

*மாதந்தோறும், மூன்றாவது புதன்கிழமையன்று அனைத்துப் பெரிய நிறுவனங்களும் இரவு 07.00 மணிக்கு மேல் மூடப்பட்டு அலுவலர்கள் தத்தம் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும் வேண்டும்["எதுக்குன்னு கேட்குறீங்களா? என்னங்க, இதுகூடவா புரியல!]

*ஒவ்வொரு ஆண்டும், தம்பதியர் அதிக அளவில் உடலுறவு கொள்வதற்கான திட்டங்களுக்கு[அவை என்னவெல்லாம் திட்டங்கள்னும் சொல்லியிருக்கலாம்] அரசாங்கம் சுமார் $1.6 பில்லியன் செலவழித்தல்.

மேற்கண்டவாறு, ஆணைகளையும் ஆலோசனைகளையும், திட்டங்களையும்  வெளியிட்டுத் தங்களின் நாட்டுத் தம்பதியரை அதிக அளவில் உடலுறவு கொள்ளத் தூண்டும் நாடுகள் வரிசையில் டென்மார்க், ரஷ்யா, ஜப்பான், ருமேனியா, சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, சாம, பேத, தான, தண்டங்களை இந்நாடுகள் கையாளக் காரணம், இங்கெல்லாம குழந்தை பெறுவது வெகுவாகக் குறைந்துவிட்டதாம்.

இந்நாடுகள், இது குறித்து இந்தியாவிடம், குறிப்பாக இந்தி பேசும் வடமாநிலத்தவரிடம்[ஹி... ஹி... ஹி!!!] ஆலோசனைகள் பெறலாம் என்பது நம் பரிந்துரையாகும்!

                                     *  *  *

குறிப்பு:

அடைப்புக்குறி[   ] விமர்சனங்கள் அடியேனுடையவை!

'independent' தளத்தில் உள்ள மிகப் பல தகவல்களிலிருந்து மிகவும் சுவையானவற்றை மட்டும் எனக்கான எளிய நடையில் தொகுத்து வழங்கியுள்ளேன்.

வருகைக்கு நன்றி!

==========================================================================

https://www.independent.co.uk/life-style/10-countries-that-desperately-want-people-to-have-more-sex-a7612246.html