உலகில் தோன்றிய மிகப் பல மதங்களும், மகான்களும், அவதாரங்களும் காலங்காலமாய் நிகழ்த்திய ஆன்மிகப் போதனைகள் மக்களில் மிகப் பெரும்பாலோரைக் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றின.
கடவுளுக்குப் பிரமாண்டமான கோயில்களை எழுப்பி, விதம் விதமாக வழிபாடுகளும் விழாக்களும் நடத்திப் பக்தி நெறி பரப்பப்பட்டது.
விளைவு என்ன?
கடவுள் கண் திறந்தாரா? கருணை மழை பொழிந்தாரா?
"ஆம்" என்றால்.....
அன்று முதல் இன்றுவரை மனித குலத்தை வாட்டி வதைத்து அற்ப ஆயுளில் மரணத்தைத் தழுவிடச் செய்யும் கொடிய நோய்களின் தாக்குதல்கள் முற்றிலுமாய் ஒழிக்கப்பட்டனவா?
'பட்டினிச் சாவுகளே இல்லை' என்னும் அளவுக்கு அவை தடுக்கப்பட்டனவா?
ஆதிக்க வெறியால் மனிதக் குழுக்களிடையே ஏற்படும் மோதல்களும் கலகங்களும் இன்றளவில் எங்கும் இடம்பெறுவதில்லையா?
மனிதன் பிற உயிரினங்களை அழித்தொழிக்கும் கொலைபாதகச் செயல்கள் நிகழ்த்தப்படுவதில்லையா?
நடுநிலை பிறழாமல் சிந்தித்தால்.....
அனைத்துக் கேள்விகளுக்கும் "இல்லை" என்பதே பதிலாக உள்ளது.
அப்புறம் எதற்குக் கோயில்கள், கொண்டாட்டங்கள், மூடத்தனமான வழிபாட்டு முறைகள் எல்லாம்?
மதபோதையிலிருந்தும், கடவுள் மயக்கத்திலிருந்தும் மக்கள் முற்றிலுமாக விடுதலை பெறுதல் காலத்தின் கட்டாயத் தேவை.
வாழ்க மனித நேயம்! வளர்க மக்கள் பணி!!
==========================================================================