இந்தவொரு கேள்வியை 'Quora' வில் வாசிக்க நேர்ந்தது.
துணையை இழந்தோரின் தொடர் மனப் போராட்டங்களுக்குக் காரணமாக உள்ள பாலுணர்வுத் தொல்லைகளுக்குத் தீர்வு தேடும் கேள்வி இதுவாகும்.
இந்தக் கேள்விக்கு 21 வாசகர்கள் பதில் தந்திருக்கிறார்கள். அவர்களில், 'இயற்கை நலம் மருத்துவர் அன்புமதி' அவர்களின் பதில் பெரிதும் விவாதிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.
அவரின் 'பதில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டிப் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்பவும், அனுபவ முதிர்ச்சிக்கு ஏற்பவும் உருவானவை அவை.
எது சரி, எது சரியன்று என்று தீர்மானிப்பது அத்தனை எளிதன்று. எனினும், அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு இதுவாகும்.
* * *
மருத்துவரின் பதில்[கருத்துரை]:
'15 ஆண்டுகள் கழிந்த நிலையிலாவது இயற்கை உணர்வை வெளிப்படுத்தி ஆலோசனை கேட்டிருக்கிறீர்கள்; இதற்குச் சின்னதாக ஒரு பாராட்டு. உங்கள் வாழ்வின் பொன்னான 15 ஆண்டுகளை வீணடித்து உங்களுக்கு நீங்களே துரோகம் இழைத்துள்ளீர்கள்; அதற்கொரு கடுங் கண்டனம்..
சரி, பதிலுக்கு வருகிறேன்.
உங்கள் கணவர் இறந்துவிட்டாரே என்று சுவாசிப்பதை(உயிர்வளி Oxygen) நிறுத்திவிட்டீர்களா?
உங்கள் கணவர் இறந்துவிட்டாரே என்று தாகத்தை(நீர்)க் கட்டுப்படுத்திக்கொண்டீர்களா?
உங்கள் கணவர் இறந்து விட்டாரே என்று எதையுமே உண்ணாமல் உண்ணாவிரதத்தில் இருந்தீர்களா?
இம்மூன்றையும் பின்பற்றியிருந்தீர்கள் என்றால், இப்போது உங்களைத் துன்புறுத்தும் உணர்வான 'காமம்' தோன்றியிருக்காதே?
ஏன் செய்யவில்லை?
ஏனென்றால், சுவாசிக்காமல், நீரருந்தாமல், உணவு உண்ணாமல் 15 ஆண்டு காலம் வாழ்ந்திருக்க வாய்ப்பேயில்லை.
சுவாசிக்காமல் ஓரிரு நிமிடங்களும், நீரருந்தாமல் ஒரு சில நாட்களும், உணவு உண்ணாமல் ஓரிரு வாரங்களும், காமத்தை அடக்கிக்கொண்டு ஓரிரு திங்கள்களும் இழுத்துப் பறித்து வாழ்ந்துவிட முடியும்.
ஆம்! உயிர்வளியை உள்ளிழுத்து, வெளிவிட்டு சுவாசம் சீரானவுடன் தாகம் தோன்றும். நீரருந்தி, தாகம் தணித்தவுடன் பசி உண்டாகும். உணவெடுத்துப் பசித்துயர் போக்கிவிட்டால், திணவெடுக்கும் உடலிலும், மனதிலும்; அதுவே காமம்.
காமம் தணிக்க உடலுற வுதான் ஒரே தீர்வு மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும்.
சுவாசத்தைப் போல், தாகத்தைப் போல், பசியைப் போல் முற்றிலும் இயற்கைத் தேவையான காம உணர்வைப் புறக்கணிப்பது கொடிய குற்றமில்லையா?
எழும் காமம் தணிக்க உடலுறவு கொள்ளாத உயிரினம் எது?
சுவாசம், தாகம், பசி ஆகியவற்றைத் தவிர்த்தால் எழும் கொடிய விளைவுகளைப் போலவே, காமத்தைத் தணிப்பதற்கான செயலில் இறங்கவில்லையெனில், மிகக் கொடிய விளைவுகளுக்கு உடலும், மனமும் ஆளாகிவிடும்.
உங்களுக்கான ஓர் இணையை வெளிப்படையாகத் தேடிக்கொள்ளுங்கள்; உங்களின் இரு மகள்களின் புரிதலோடு. மறுமண பந்தமாக இணைந்தாலும் சரிதான்; சேர்ந்து வாழ்தல்(Living together) என்ற சிறப்பான வாழ்க்கை முறை என்றாலும் சரிதான்.
வாய்ப்பே இல்லையெனில், ரகசிய வாழ்க்கை முறையிலாவது ஓர் ஆணின் துணையைத் தேடிக்கொள்ளுங்கள். வெளிப்படையாக இணைந்தாலும் சரி; மறைமுக வாழ்க்கை என்றாலும் சரி; நன்கு நிதானமாக அலசி ஆய்ந்து நேர்மையான ஒரு நபரை, உங்கள் மீது காதல் கொள்ளும் ஒரு நபரைத் தேர்வு செய்யுங்கள். உள்நோக்கங்களுடன் உலவும் அயோக்கியனைத் தேர்வு செய்துவிடாதீர்கள்.
சரியான ஆண் துணை கிடைக்கவேயில்லையெனில், சுயசுகம் காண்பதில் தவறில்லை.
சமூகத் தடைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
நீங்கள் சுவாசத்தடையால் திணரும்போது, சமூகம் மௌனம் காக்கும்.
தாகத்தால் தவிக்கும்போது, சமூகம் வேடிக்கை பார்க்கும்.
பசியால் வாடும்போது, சமூகம் முகத்தைத் திருப்பிக்கொள்ளும்.
காமத்தால் தத்தளிக்கும்போது மட்டும் சமூகம் உங்கள் மீது காறி உமிழ முனையும்; முந்திக்கொண்டு நீங்கள் உமிழ்ந்துவிடுங்கள் சமூகத்தின் முகரையிலேயே!
வாழ்வது ஒரே தடவை மட்டுமே! அவ்வாழ்வை முடிந்தவரை குறைவின்றி அனுபவித்து வாழுங்கள்; நேர்மையாகவும், நற்சிந்தையோடும்!
-சு.சா.அன்புமதி, இயற்கை நல வாழ்வியல் மருத்துவர்.
* * *
மதிப்புரைகள்[வயது வேறுபாடின்றிப் பலரும் வாசிப்பதற்கான பதிவு இது என்பதால், கருத்துரைகளில் முகம் சுளிக்க[சுழித்தல்] வைக்கும் சிற்சில சொற்களும் தொடர்களும் நீக்கப்பட்டுள்ளன]:
1. Kadambavanaraja KALAI CHANGAM
11 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
வணக்கம்! இது உடலால் மனதுக்கும், மனத்தால் உடலுக்குமானது. உங்கள் வயது குறிப்பிடவில்லை. மேலும் ஆண்-பெண் பேதமின்றி ஏற்படும் உந்துதல். நீங்கள் இளவயது கடந்துவிட்டீர்களோ? மனதைக் கட்டுப்படுத்த பழகுங்கள். தனிமையைத் தவிருங்கள். உணவிற்கும் காம உணர்விற்கும் அதிகமான சம்பந்தமுண்டு. உணவை மாற்றுங்கள். பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். இது பாரதநாடு; அதிலும், நீங்கள் இருப்பது தமிழ் நாடு. மறுமணம் முடிப்பது நல்லது. தவறவிட்டுவிட்டீர்கள். மேலைநாட்டு நாகரீகம் இன்னும் நம்மை விழுங்கவில்லை. காலம் சென்றுவிட்டால் ஆசைக்கு அணை போடப் பழகவும்.....
2. Karthikeyan Subramani
14 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
முதலில் உங்கள் மனநிலைமையை வெளிப்படியாகச் சொன்னமைக்கு 1000 முறை நன்றி சொல்கிறேன்,
கவலைப்படாதீர்கள், கவலையை விட்டு ஒழியுங்கள். முதலில் எந்த ஆண் துணையும் நம்பாதிர்கள், காரணம் அனைத்து ஆண்களும் நல்லவர்களே, அனால் 99% ஆண்கள் தங்களுக்கு ஒரு ஆபத்து வருகிறது என்றால் பெண்கள் மீது பழி போட்டுவிட்டுத் தப்பிப்பவர்களே.
மேலும் உங்களுக்கு குழந்தைகள் வளர்ந்து ஆகிவிட்டதாகச் சொல்லி இருக்கீர்கள், இந்த விஷயம் அவர்களது எதிர்காலதையும் பாதிக்கும். நீங்கள் இப்படியே இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் குலதெய்வம்,
தனிமையில் இருக்கவேண்டாம், உங்கள் பெண் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் பேசுங்கள்.....
3. பூபதி
11 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது.
அதிகநேரம் தனிமையிலிருப்பதும், ஓய்விலிருப்பதும் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்தமான, உங்களால் முடிந்த நல்ல பொழுதுபோக்குகளை, அளவாக, முறையாக மேற்கொள்ளுங்கள். அல்லது கலைகள், சிறுதொழில்கள்/வேலைகளில் ஈடுபடுங்கள். இதனால் ஏற்படும் கவனத்திசை திருப்பல், உங்கள் போக இச்சையை வெகுவாகத் தணித்துவிடும். போக இச்சையைத் தூண்டக்கூடிய வகையிலான காட்சிகள், பேச்சுகள் முதலியவற்றைத் தவிருங்கள். அதிகளவிலான உடற்சூடும், போக இச்சையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், உடற்சூட்டையும் மிதமான அளவில் தொடர்ந்து பராமரியுங்கள். சாத்வீகமான உணவுகளை உட்கொள்வது கூடுதல் பலன்தரும் (எனினும் இது உங்கள் விருப்பமே).....
4. Manikandan Ramasamy
12 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
இதில் தவறு ஒன்றும் இல்லை. மறுமணம் செய்துகொள்ளுங்கள்.
5. Raj Kumar
13 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
இங்கே பதிவிடப்போவது என்னுடைய சொந்தக் கருத்து. யாரும் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். தவறாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை.
முதலில் காம எண்ணம் தொடருவது இயல்பான ஒன்று. மனிதனாய்ப் பிறந்த எல்லோரும் அனுபவிக்கும் வலி/சுகம். எனவே குற்ற உணர்ச்சி வேண்டாம்.....
.....செக்சிற்காகத் திருமணம் செய்வது நல்ல வழிமுறை இல்லை. அது, இன்னொருவர் வாழ்வு சம்மந்தப்பட்டது. இது உங்கள் வாழ்கை, உங்களுக்கு பிடித்தவாறு வாழுங்கள்.
6. Nagoor Meeran
15 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
திருமணம் செய்து கொள்வது நல்லது இதுதான் என் கருத்து
7. Mohamed Ajmeer Abdul Rahuman
16 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
தோழர், வெளிப்படையானதும் ஆர்வமூட்டக் கூடியதுமான கேள்வியைத் தைரியமாக கேட்டதற்கு நன்றிகள்.
மனித உடலின் இயற்கைத் தன்மை அது. பசித்தால் உண்கிறோம். ஆசைப்பட்ட இடங்களுக்கு போகிறோம். அதேபோல் உடல் தேவையும்.
இங்கு உமது உணர்வுகளை மதியுங்கள். அதன் ஏக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். சிறந்த வழி... மறுமணம் செய்வதைப் பற்றி ஆழமாய்ச் சிந்தியுங்கள். மாற்று வழி உறவிற்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளை ஒப்பிடுங்கள்.
மீண்டும் வாழ்த்துக்கள். சிறந்த முடிவோடு மறுமணம் செய்து நீண்ட ஆயுளோடு நெடும் வாழ்வு வாழ்க.
8. மாணிக்கவாசகம் சம்மந்தம்்
12 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
செக்ஸ்ங்கிறது, அவங்க அவங்க உடலமைப்பையும் மனசமைப்பையும் பொருத்தது! முடிவு எடுக்கறது உங்க சூழ்நிலையோ வினையோ! 😳
9. Ganesan Marimuthu
17 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
தங்களை எப்பொழுதும் ஏதோ ஒரு பணியில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.
10. 90days 90days
16 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
யோகா செய்யுங்கள். மன அடக்கம் பெறலாம்.
11. Shivan Amalraj
16 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
தயவு செய்து உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய அன்பான துணை ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள்.
அது ஒன்றே இது போன்ற எண்ணங்களிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் மீள்வதற்கான வழி. அந்தத் துணைவருடன் வெளிப்படையாகப் பேசுங்கள்.. உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுங்கள். பசி தாகம் போன்று காமம் அடக்கி வைத்தால் உடல், மனப் பிரச்சனைகள் வரும்..
மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்று நீங்கள் வருந்திக்கொண்டு இருந்தால் இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து மிகவும் வருத்தமும் மன உளைச்சலும் அடைவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. என்ஜாய்.
12. Shanti Munna
16 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
நியாயமான தேவைதான். உறவுகளுக்காகவே உழைத்து உழைத்து உன் தேவையை ஒதுக்கமுடியாது. மேலை நாடுகள் போல சிங்கிள் மாம்கள் இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் பொருத்தமான இணையைத் தேடி நேர்மையாக மணந்து எஞ்சிய வாழ்வை அர்த்தமுள்ள திருப்தியான வாழ்க்கையாக வாழ்கிறார்கள். கள்ள உறவுகளில் சதி மிக அதிகம். ஜாக்கிறதை.
13. Vel Murugan
14 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
தனிமையில் இருக்க முடியாது. அதனால் யாருடனாவது இணைவது சிறந்தது.
14. Velu M
13 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
உங்களுக்குப் பிடித்தவரிடம் பழகுங்கள்.
15. Venkatachalapathy Chengalvarayanaidu
11 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
உடல் பசி இயற்கை ஆனது என்றாலும் அது நம் மன கட்டுப்பாட்டிற்கு உள் அடங்கி இருப்பதே நல்லது. அந்த நேரத்தில் மனதை வேறு நல்ல நிலைக்கு மாற்றுவது நல்லது. அது போல எண்ணம் வரும் போது தீய வழிகளில் செல்ல நேரிடலாம். உங்கள் நி லையில் இது மிகவும் பாதிக்கும்.
16. Bala Maha
17 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
இறைச் சிந்தனை நல்லது. நமக்குப் பிடித்த பொழுதுபோக்கு நமது நட்பு வட்டத்தில் நல்ல அரட்டை அடிப்பவர்களுடன் மனதுக்குப் பிடித்த இடங்களுக்குப் போகலாம். தியானம் செய்யலாம். இப்படி நிறைய உள்ளது ஆனால், தனிமையில் மட்டும் இருக்கூடாது.
17. Sathish V
17 செப்டம்பர் அன்று பதில் அளிக்கப்பட்டது
இதற்கு ஒரு நல்ல தீர்வு மறுமணம்தான்.
==========================================================================https://ta.quora.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-15-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D