பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 15 டிசம்பர், 2021

மருத்துவர் ராமதாஸின் 'வருத்த உரை'யும் வாசகரின் 'கருத்துரை'களும்!!

//பாமக நிறுவனர் ராமதாஸ், அண்மை மாதங்களாக மாவட்டம்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பாகப் பேசிவருகிறார். 'திண்ணைப் பிரசாரம், 60 தொகுதிகளில் வெற்றி' என்பதை மையப்படுத்திப் பேசிவரும் இவர், நேற்று (14.12.2021) விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாமக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசினார்.....// -இது, மருத்துவர் ராமதாஸ் அவர்களின் உரைக்கு 'விகடன்' எழுதிய முகவுரைhttps://www.vikatan.com/government-and-politics/politics/drramadoss-speech-at-the-pmk-meeting-held-at-villupuram?pfrom=trendingarticle-section.  இதைச் சொடுக்கி முழு உரையையும் நீங்கள் வாசிக்கலாம்.

மருத்துவரின் 'வருத்த உரை'க்கு வாசகர்கள் வழங்கியுள்ள கருத்துரைகளின்[விமர்சனங்கள்] தொகுப்பு பின்வருமாறு[இதைப் பதிவு செய்தபோது 14 வாசகரின் கருத்துகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன]:

கருத்துரைகள் நடுநிலையானவையா, தற்சார்புள்ளவையா? 

முடிவெடுப்பது உங்களின் 'சார்பு நிலை'யைப் பொருத்தது.

கருத்துரைகள்[விமர்சனங்கள்]:

*Swaminathan K

1h

Both of you go back to doctor work. Thoratupashathukku aasaipattu kai pashathai ishakkadinga.

sethu

83 வயதிலும் ஆசையை பாரேன் ... பணம் பதவி சுய நலம் ...

Hello maramvetti captain, the way you talk is not practical because if all other people decided not to vote even one, how you talk like this. Just to impress you can talk. How you start your party by cutting road side trees and block the road. It is sick to note that you insticate violence in common people. If all other caste people joint together and avoid you all what will happen. All the best.

வன்னியன் என்ற பெயரை நீக்கி இதே அறிக்கையில் தமிழன் என்று நீங்கள் சொல்லிருப்பீர்களேயானால், அதை ஒத்துக்கொள்ளலாம், மேலும் அதை ஒரு பொன்னான அறிவுரையாக கூட ஏற்றுக்கொள்ளலாம். அறிக்கை ஜாதியை நோக்கி பயணித்தது தான் நெருடல். இருந்தாலும், இது உங்கள் கட்சி, உங்கள் நிர்வாகிகளுக்கான கூட்டம்.

எவ்வளவு உசுப்பேத்தினாலும் இனி கடினம்தான்

கலெக்டர்,செயலாளர்,இயக்குநர், ஆக அதற்கு உரிய படிப்பு மற்றும் தேர்வில் வெற்றி பெறவேண்டும் அதற்கான முயற்சி வேண்டும் நான் படிக்கமாட்டென் ஆனால் எனக்கு எல்லப்பதவியும் வேண்டும் என் மகன் முதல் மந்திரி ஆகவேண்டும் என்றால் எப்படி?

ஒட்டு மொத்த தமிழக சமுதாயமே... ஒருமுறை பாமக-விற்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டை உங்களில் ஒருவர் ஆளட்டும். அதற்கு பொருத்தமான வரை நான் கொடுத்திருக்கிறேன், அவர்தான் அன்புமணி ராமதாஸ் ----> தொடக்கத்தில் இருந்து வன்னியர்களை பற்றி மட்டுமே பேசிவிட்டு 'ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும்' பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறீர்கள் ... உங்களில் ஒருவர் ஆளட்டும் என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே, ஆள்வதற்கு தகுதியான அந்த ஒருவர் என்னுடைய மைந்தன் தான் என்று சொல்கிறீர்கள் ... நியாயமா ?

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலே ஒரே ஒரு கலெக்டர் கூட வன்னியர் கிடையாது. 91 செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை, 150 இயக்குநர்களில்... ஐ.பி.எஸ் இல்... தலா 5 பேர் மட்டுமே வன்னியர்கள். -------> தம்முடைய சமூகம் முன்னேற வேண்டும் என்று பேசுவது வேறு ... ஆனால் மாநிலத்தில் உயர் பதவியில் உள்ளவர்களின் சாதியை எல்லாம் தேடி கண்டுபிடித்து, நம்ம சாதிக்காரர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று பேசுவது வேறு ... இது தவறான சொல்லப்போனால் மிக ஆபத்தான அணுகுமுறை .... இது வன்னியர்களை மாற்று சமூகத்தவரிடம் இருந்து இன்னமும் அந்நிய படுத்தும் ... இது போன்ற பேச்சுக்கள் வெறுப்பை விதைத்து நாளைக்கு கலவரம் வரை தூண்டும் .. மருத்துவர் போன்ற பக்குவப்பட்ட மூத்த அரசியல் தலைவரிடம் இருந்து இது போன்ற பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை .. பாமகவை காட்டிலும் கழகங்களிலும் மாற்று கட்சியிலுமே அதிகமான வன்னியர்கள் உள்ளார்கள் ... இதனுடன் பாமகவின் வாக்கு வாங்கி வீழ்ச்சி அடைவதையும் சேர்த்து பார்க்கும் போது இது பெரும்பாலான வன்னியர்கள் இது போன்ற சமூக பற்றை உசுப்பேத்திவிடும் பேச்சுகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்பதையே காட்டுகிறது ... மது ஒழிப்பு , மாற்றம், முன்னேற்றம் என்று சற்றே பாதை மாறி கவனம் ஈர்த்த கட்சி திரும்பவும் சாதி வளையத்துக்குள் விழுவது துரதிர்ஷ்டம் ...

காசுக்கு விலைபோகிறார்கள் என்று யாரை சொல்கிறார் மருத்துவர்??ஓ... கண்ணாடியை பார்த்து பேசி இருக்கார் மருத்துவர் 😁😁😁😁

-

வீரம், மானம், ரோஷம் எல்லாம் இருக்கிறதாலதான் உங்களுக்கு வாக்களிப்பது தவறு என வன்னியர் இன மக்கள் உங்களை தேர்தலுக்கு தேர்தல் நிராகரித்து உங்கள் கட்சி தேய்பிறையாகி வருகிறது. உங்கள் மகன் சுகாதார துறை அமைச்சராக இருந்தபொழுது எத்தனை மாணவர்களுக்கு இலவச மருத்துவ சீட் வாங்கி கொடுத்தார் என்று சொல்ல முடியுமா ஐயா? வாய்ப்பு கிடைக்கும்போது உங்க பாக்கெட்ட மட்டும் நிரப்ப வேண்டியது, பதவி போனபிறகு மானம், ரோஷம், இனம்னு பிதற்றவேண்டியது.. இதுவரை உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உதவுங்கள், உண்மையாக இருங்கள் அப்புறம் வன்னியர் இன மக்களும் உங்களுக்கு உண்மையாக இருப்பாங்க..

திரு விகடன் அவர்களே , ஆண்ட கட்சி என்று சொல்கிறார்கள் , எங்கு எங்கு , எந்த கால கட்டத்தில் ஆண்டார்கள் என்று ஒரு கட்டுரை எழுதவும், தெரிந்து கொள்வதற்க்காக கேட்கின்றோம் .

ஓரு ஜாதியை மட்டும் தூக்கி பிடிக்கும் இவர் மற்ற சாதிக்காரர்கள் தமக்கு ஆதரவு தருவார்கள் என்று எப்படி நம்புகிறார்?

Yes- he amassed wealth and his family becomes rich