பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 14 டிசம்பர், 2021

'பாலுறவுக் குற்றத் தண்டனைகள்'... பாடம் கற்பிக்கும் சீனா!!!



பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.

சீனா, வடகொரியா போன்ற, 'திகில்' ஊட்டும் மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் நாடுகளைக்கிடையே, குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க வழிவகை செய்யும் ஓட்டை உடைசல் சட்டங்களைக் கையாளும் 'இந்தியா' போன்ற நாடுகளும் இருக்கவே செய்கின்றன.

ரத்தினச் சுருக்கமான ஒரு பட்டியல் கீழே:

ஆப்கானிஸ்தான்& வடகொரியா:

இந்த நாடுகளில்,  வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணே தனக்குக் கொடுமை இழைத்த குற்றவாளியை, அவரின் தலையில் சுட்டுக் கொல்வார். ["அந்த இடத்தில் சுட்டுக் கொல்வது எந்த நாட்டில்?" என்று எவரெல்லாமோ முணு முணுப்பதை மானசீகமாக உணர முடிகிறது. அவசரப்பட்டால் எப்படி? பொறுமையுடன் பட்டியலை வாசியுங்கள்}.

எகிப்து:

பொதுமக்கள் முன்னிலையில் குற்றவாளிகள் துக்கிலிடப்படுவார்கள். 

நெதர்லாந்து:

பிரெஞ்சு முத்தம் தருவதுகூட[நாமெல்லாம் பறக்கும் முத்தம் தருவது போல] இந்த நாட்டில் பாலுறவுக் குற்றம்தானாம். குற்றவாளிகளின் வயதுக்கேற்ற வகையில் தண்டனையும் கூடக்குறைய [4 ஆண்டு முதல் 15 ஆண்டுகள்வரை] இருக்குமாம்.

'நார்வே'&'இஸ்ரேல்':

இந்த நாடுகளிலும் 4 - 15 ஆண்டுச் சிறைவாசம்தான்.

பிரான்ஸ்&ரஷ்யா:

தண்டனை 30 ஆண்டுகள்வரை நீட்டிக்கப்படுவதுண்டு. 

துபாய்:

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 நாட்களில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்.

அமெரிக்கா:

தேசியச் சட்டத்திற்கேற்பவும் மாநிலச் சட்டத்திற்கு ஏற்பவும் தண்டனைகள் மாறுபடும். 

குறிப்பிட்டுச் சொல்லும்படி மிகக் கடுமையான தண்டனைகள் ஏதுமில்லை, இந்தியாவைப் போல[இங்கு அரிதாகவே தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது].

சீனா: 

இது விசயத்திலும் 'சீனா'வுக்குத்தான் முதலிடம். ஒரு கட்சி ஆட்சிமுறை கொண்ட இந்த நாட்டில், பாலுறவு வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. குற்றம் செய்யும் ஆணின் 'பிறப்புறுப்பு' சிதைக்கப்படுகிறது[இதைக் காட்டிலும், 'டுமீல்'னு ஒற்றைத் தோட்டாவில் சுட்டுப் பொசுக்கிவிடுவது தேவலாம்தானே?].

ஈரான்:

குற்றவாளிகள் பொது இடங்களில், தூக்கிலிடப்படுவது மட்டுமல்ல, அடித்தே கொல்லப்படுவதும் உண்டு. 100 கசையடியும் உள்ளது. பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியுமாம்.

மேற்கண்ட செய்திகளைச் சற்றே விரிவாகத் தொகுத்தளித்த Neo Tami.com, சுட்டெடுத்துப் பதிவு செய்வது கூடாது என்கிறது. ஆனாலும், வருமானம் பண்ணும் நோக்கமெல்லாம் நமக்கு இல்லாததால், copy&paste செய்யாமல் படித்துக் குறிப்பெடுத்துப் பதிவு செய்திருக்கிறோம். 'Neo Tamil.com' வாழ்க!

==========================================================================