இந்த மாற்றங்கள் குறித்து, தயக்கம் காரணமாக எவரிடம் விளக்கம் கேட்பது என்பது புரியாமல் அவர்கள் மனம் குழம்புவார்கள்; கவலைக்குள்ளாவார்கள்; வாட்டி வதைக்கும் சந்தேகங்களைச் சம வயதுள்ள தோழிகளிடம் பகிர்வதன் மூலம் விடை காண முயற்சி செய்வார்கள். இவர்கள் எல்லோருக்குமே அனுபவ அறிவு சிறிதும் இல்லாத நிலையில், அரைகுறையாய்க் கேட்டறிந்த தகவல்களைத் தமக்குள் பகிர்ந்துகொள்வார்கள்.
இந்த அரைகுறைப் புரிதல் இவர்களுக்கான குழப்பங்களை அதிகரிக்கவே செய்யும். ஆகவே.....
தன் மகளுக்கான சக தோழிகளில் ஒருத்தியாகத் தன்னைப் பாவித்து, தயக்கத்தை விட்டொழித்து, அவளின் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் தந்து மனதில் தெளிவை உண்டுபண்ணுவது பெற்ற தாயின் கடமையாகும்.
மூன்று வயதில் ஜட்டி போடாவிட்டால், "பப்பி ஷேம்" என்கிறோம். ஆறு வயதில் பிறப்புறுப்பைத் தொடுவதற்கு எவரையும் அனுமதிக்கக் கூடாது என்று விழிப்புணர்வை உண்டுபண்ணுகிறோம். எட்டு வயதில், அவளின் 'அந்தரங்கம்' தொடர்பான எச்சரிக்கைகளைச் செய்கிறோம்[குறிப்பாக, ஆண் நண்பர்களைப் பற்றி].
ஆண்கள் அவளின் உணர்வுபூர்வமான உறுப்புகளைத் தொடுதல், உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசுதல் போன்ற தகாத செயல்களுக்கான உள்நோக்கம் என்ன என்பதையும் அவளுக்குப் புரிய வைத்தல் மிக முக்கியத் தேவை ஆகும்.
இதற்கிடையே,
என்னதான் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளாக இருந்தாலும், பெற்ற மகளிடம் அந்தரங்க விசயங்களைப் பகிர்ந்துகொள்வதற்குத் தாயின் மனம் பெரிதும் தயங்கவே செய்யும். இதைத் தவிர்த்திட.....
அந்தரங்கம் குறித்த விழிப்புணர்வை, பெண்ணின் பாட்டி, அல்லது அம்மாயி மூலம் ஏற்படுத்தலாம். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால், குடும்ப நலனில் மிகவும் அக்கறை கொண்ட வயதான பெருசுகளின் உதவியை நாடலாம்.
ஆக, வளரிளம்[பதின் பருவம்] வயதில் பெற்ற மகளின் உடலைப் பாதுகாப்பதிலும், மனதைப் பக்குவப்படுத்துவதிலும் தாய்க்குள்ள பங்கு மிக அதிகம் என்பதை எந்தவொரு குடும்பத் தலைவியும் மறத்தல் கூடாது.
==========================================================================நன்றி: 'குமுதம்' இணைப்பு, 07.09.2015['அம்மாக்களுக்கு டிப்ஸ்...']
இயல்பான உள்ளடக்கத்துடன், கருத்துகளைப் பதியும் முறையில் மட்டும் சற்றே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.