பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 27 டிசம்பர், 2021

மாதவிலக்குக் குருதியின் மருத்துவக் குணம்!

எதைத் தீட்டென்றும் அசூசை என்றும் நம்மவர்கள் சொல்லி வந்தார்களோ அதுவே உயிர்காக்கும் மருந்தாகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்.

'வேர் செல்'களைப்[Stem Cells] பயன்படுத்தி உடலில் திசுக்களைப் புதுப்பிக்கும் சிகிச்சைமுறை உலகம் முழுவதும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

வளரும் கருவிலிருந்து 'வேர் செல்'களை எடுத்துப் பயன்படுத்துவதில் சிசுக்கொலை என்ற தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது.

இதற்கு ஆபத்தில்லாத மாற்றுவழி.....

குழந்தை பிறந்தவுடன் தூக்கி வீசப்படும் நஞ்சுக்கொடியிலிருந்து 'வேர் செல்'களைப் பிரித்தெடுப்பதே. பெண்களின் மாதாந்திர உதிரப்போக்கிலிருந்தும் 'வேர் செல்'களைப் பெறமுடியும்.

இரத்தத்தில் காணப்படும் 'வேர் செல்'களை 'ஸ்ட்ரோமல்-ஸ்டெம் செல்' என்பார்கள். கருவிலிருந்து பெற்ற 'வேர் செல்'களிலிருந்து சகலவிதமான திசுக்களையும் பெற முடியும்.

'வேர் செல்'களிலிருந்து அடிபோஜெனிக், காண்ட்ரோஜெனிக், ஆஸ்டியோஜெனிக், அதாவது கொழுப்புத் திசு, இணைப்புத் திசு, எலும்புத் திசு, இதயத் திசு, நரம்புத் திசு ஆகியவற்றைப் பெறமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதன் மூலம்,

'வேர் செல்' சிகிச்சைகளுக்குப் பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் பயன்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இனியேனும், பெண்களின் மாதவிலக்குக் குருதி அசூசையானது என்று சொல்லி, நம் மக்கள்[பெண்கள் உட்பட] பெண்ணினத்தை இழிவுபடுத்துவதைத் தவிர்ப்பார்களாக!

==========================================================================

நன்றி:

மு.குருமூர்த்தி, KETRU.COM

http://idhuthanunmai.blogspot.com/2008/10/blog-post_28.html