எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒரு முதலிரவு 'முன்னோட்டம்'[இளசுகளுக்கு மட்டும்]!!!

வழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, 'குழம்பி' குடித்து மணமகள் பல்லவியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

உள்ளறையிலிருந்து சர்வ அலங்காரங்களுடன் வெளிப்பட்ட பல்லவி அனைவரையும் கும்பிட்டு அமர்ந்தாள்.

அவளின் அபார அழகு அவர்களை வெகுவாகக் கவர, "பெண்ணை எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. திருமணத்துக்கு நல்ல நாள் பார்த்துடலாம்" என்றார்கள் ஒருமித்த குரலில்.

"பார்த்துடுவோம்" என்றார் பல்லவியின் அப்பா.

"பல்லவியோடு தனியா பேசணும்" என்றான் மாப்பிள்ளை சந்திரன்.

பெண் வீட்டார் சம்மதிக்க, தனியறைக்கு இடம் பெயர்ந்தாள் பல்லவி. சந்திரன் பின்தொடர்ந்தான்.

"உட்காருங்க". -அவள் நின்றுகொண்டே அவனுக்கு ஓர் இருக்கையைக் காட்டினாள்.

சந்திரன் உட்காரவில்லை. அதிரடியாக, மது ஊறிப் பளபளக்கும் அவளின் அதரங்களில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

மூச்சுத் திணறிய பல்லவி, "தனியா பேசணும்னு சொல்லி....." -சிரமப்பட்டுச் சிதைந்த சொற்களை  உதிர்த்தாள்.

"காதலர்களாகிய நாம் பல தடவை ரகசியமாச் சந்தித்துப் பேசிட்டோம். நம் கல்யாணத்துக்கு முன்பே உனக்கு முத்தம் கொடுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். நீ சம்மதிக்கவே இல்லை. இன்னிக்கி நம் கல்யாணம் உறுதியாயிடிச்சி. உன் சம்மதம் இல்லாமலே....."  என்று சொல்லி நிறுத்தி, அவளின் முன்னெற்றி, கண்கள், கன்னங்கள், கழுத்து..... என்று ஆசைப்பட்ட இடங்களிலெல்லாம் அசுரத்தனமாக முத்தங்கள் பதிக்கலானான் சந்திரன்.

"வரம்பு மீறிடுவீங்களோன்னு எனக்குப் பயமா இருக்கு" என்று கொஞ்சமாகத் தன்னை விடுவித்துக்கொண்டு, கிறங்கிய குரலில் சொன்னாள் பல்லவி.

"பயப்படாதே. இந்த முத்தம் நம் முதலிரவுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே" என்று முணுமுணுத்தான் சந்திரன்.

நேரம் கரைந்துகொண்டிருந்தது. இருதரப்புச் சொந்தங்களும் இவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்!

==========================================================================