அந்த மாகாணத்தின் புதிய கருக்கலைப்புச் சட்டப்படி, 'கருவில் சிசுவின் இதயத் துடிப்பு உணரப்பட்ட காலத்திற்குப்[தாயின் வயிற்றில் வளரும் கருவுக்கு ஆறு வாரங்கள் ஆன நிலை], பின்னர்' கருக்கலைப்புச் செய்ய அனுமதி கிடையாது. கருக்கலைப்புச் செய்வதாக இருந்தால் அதற்கு முன்னரே செய்துகொள்ள வேண்டுமாம்.
'கருவிலுள்ள குழந்தையின் இதயத்துடிப்பை உணரக் குறைந்தது ஆறு வாரம் தேவை. இந்த 6 வார காலக்கட்டத்திற்குள் தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே பெரும்பாலான பெண்களுக்குத் தெரியாது என்பதால், இவ்வளவு கடுமையான சட்ட நடைமுறை எங்களுக்கு ஒத்துவராது. இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி' என்று வாதிட்டதோடு, உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் செய்தார்கள் டெக்ஸாஸ் மாகாணத்துப் பெண்கள்.
இதை விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என ஒதுங்கிக்கொண்ட நிலையில்தான் போராட்டத்தில் குதித்தார்கள் அவர்கள்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவின் 50 நகரங்களில் பெண்கள் ஊர்வலங்கள் நடத்தினார்களாம்.https://www.bbc.com/tamil/global-58778915 {இந்தப் பிரச்சினைக்குரிய சட்டத்திற்கு நீதிமன்றக் 'கூட்டாட்சி நீதிபதி' தற்காலிகத் தடை விதித்துள்ளார்' என்பது பின்னர் வந்த செய்திhttps://www.virakesari.lk/article/114832}.
'டெக்சாஸ்' மாகாணப் பெண்கள் மேற்கொண்டது என்ன மாதிரியான போராட்டம் என்பதை அறிந்தபோது, அங்குள்ள ஆண் வர்க்கம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானது என்கிறார்கள்.
'இந்தக் கருக்கலைப்புச் சட்டம் திருத்தப்படும்வரை, பெண்கள் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை' என்பதே அந்தப் புதுமையும் புரட்சிகரமானதுமான போராட்டம்.
இந்தப் புதுமையான போராட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு, இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து டெக்ஸாஸ் மாகாணப் பெண்களுக்கும் அழைப்பும் விடுத்தவர், பிரபலமான பாடகியும் நடிகையுமான 'பெட்டே மில்லர்' என்று செய்தி வெளியிட்டன உலகெங்கும் உள்ள ஊடகங்கள்.
ஒரு போராட்டம் என்றால், நம் ஊர்ப் பெண்கள் ஊர்வலம் போவார்கள்; கூட்டம் சேர்த்து முழக்கப் போராட்டம் நடத்துவார்கள்; அதிகபட்சமாக, ஒரு பகற்பொழுது உண்ணாவிரதம் இருப்பார்கள். இது நேற்றுவரையிலான நிலைமை.
நம் பெண்களில் மிகப் பெரும்பாலோர் முற்போக்குச் சிந்தனையாளர்களாக மாறியுள்ள இன்றையக் காலக்கட்டத்தில்.....
டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது போல் ஒரு கருக்கலைப்புச் சட்டம் இங்கு இயற்றப்படுமானால்[*இந்தியாவில்: 24 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்புச் செய்ய விரும்பும் கர்ப்பிணிகள் மாநில மருத்துவக் குழுவை, அணுக வேண்டியிருக்கும். https://www.puthiyathalaimurai.com/newsview/] நம் பெண்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஆண்களை நாட்கணக்கில் பட்டினி போடும் போராட்டத்தை நடத்தியிருப்பார்களா?
'மாட்டார்கள்' என்பதே நம் போன்றோர் நம்பிக்கை. காரணம்.....
நம் பெண்களில் மிக மிகப் பெரும்பான்மையோர் ரொம்பவே இளகிய மனம் படைத்தவர்கள் என்பதுதான்! ஹி...ஹி... ஹி!!!
==========================================================================