கொப்புளங்களோடு பெண்ணின் கைகளும் பூச்செடி[கள்]யும் தெரிகின்றன அல்லவா, செடியின் பெயர் 'Hogweed' என்பது. இது, பிரிட்டனில் உள்ள 'லாஞ்சாசீர்' ஆற்றுப்பகுதியில் வளர்கிறது. இந்தச் செடி சுமார் 14 அடி உயரம்வரை மரமாக வளருமாம். வெகு அழகான இந்த மரத்தையோ செடியையோ பூக்களையோ தொட்டால்,.....
இதில் உள்ள sensing Furanocoumarins என்னும் அமிலம் தோலில் பட்டவுடன் முதலில் கொப்பளங்கள் ஏற்பட்டு, பின்னர் இது உடல் முழுவதும் பரவி எரிச்சலை உண்டுபண்ணுமாம்.
இதன் விளைவாகப் பார்வையில் குறைபாடு ஏற்படும். ஒரு கட்டத்தில் தொட்டவரின் உயிரே பறிபோகும்.
இதற்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தச் செடி மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் இதன் தாக்கம் குறித்து உலக அளவில் அறியப்படவில்லை என்கிறார்கள்[https://tamil.samayam.com/viral-corner/trending/careful-with-this-plant-just-by-touching-it-you-will-get-blisters-in-the-hands-and-lose-you-life/articleshow/88054569.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3 -2 Dec 2021, 7:00 pm]
* * *
இது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செய்தி.
'இந்தச் செடியையோ பூக்களையோ தொட்டால் மட்டும்தான் கொல்லும் என்பது நமக்குப் புதிய செய்தி. நம் பெண்களின் கண்களோ பார்க்கும் ஆடவரின் உயிரையே பறித்துவிடும் என்பது நம்மிடையே உலவும் பழைய செய்தியாகும்[பரப்பியவர்கள் அந்நாள் புலவர்களும் இந்நாள் கவிஞர்களும்] .
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
[பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு, அவற்றைப் பார்ப்பவர்களின் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டுப் போர் செய்கின்றன] என்னும் திருவள்ளுவரின் குறளையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
ஓர் உண்மை தெரியுமா?
அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டும் திருவள்ளுவர் எழுதியிருப்பாரேயானால் இவற்றை எவரும் விரும்பிப் படிக்கமாட்டார்கள். விரும்பாதவர்களையும் கவர்ந்து இழுக்கத்தான் காமத்துப்பாலை அவர் எழுதியிருக்கக்கூடும் என்பது அடியேனின் கருத்து.
* * *
இது தொடர்பாக இன்னொரு செய்தி:
'இளைஞர்களைப் பார்வையால் கொல்லாமல் கொல்லும் ரித்திகா சிங்.. அய்யோப்பா! செம லுக்கு' என்றிப்படித் தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளது TAMIL CINEMA NEWS ; அந்த அம்மணியின் படத்தையும் அது பிரசுரித்திருக்கிறது.
இவரின் இந்தக் கண்களை வெகு நேரம் பார்த்தேன்; நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன். விளைவு.....
இந்த வினாடிவரை நான் உயிரோடுதான் இருக்கிறேன்! ஹி... ஹி... ஹி!!!
=======================================================================================