வெள்ளி, 31 டிசம்பர், 2021

யாங்கோன்[Yangon] தேவதை!!!

யாங்கோன்[ரங்கூன்] மியான்மர்[பர்மா] நாட்டின் மிகப் பெரிய நகரம். அந்த நகரத்தில் உள்ள மிகப் பெரிய ஒரு காய்கறிகள்&பழங்கள்&சமைத்த உணவுகள் அங்காடியைப் பற்றித்தான் இப்போது தெரிந்துகொள்ள...

"யோவ், பர்மா அங்காடியைப் பத்தித் தெரிஞ்சிட்டு, விமானம் ஏறிப் போய்க் காய்கறியும் பழமும் மற்றதும் வாங்கிட்டு வரவா போறோம்? தேவதையைப் பத்திச் சொல்லய்யா" என்று இடைமறிக்கும் உங்களின் மனப் பதற்றத்தை உணர முடிகிறது. 

சொல்கிறேன்[அவசரப்பட்டு, 'காணொலி'க்குத் தாவிவிடாதீர்கள். தேவதையை ஒரு முறை பார்த்துவிட்டால் மீண்டுவந்து வாசிப்பைத் தொடர்வது இயலாமல் போகலாம்].

'அவள் சிக்கென்று இருந்தாள்' என்று நம் கதாசிரியர்கள் வர்ணிப்பது பலருக்கும் தெரியும். அது கதைகளில் மட்டுமல்ல, எதார்த்த வாழ்க்கையிலும் 100% 'சிக்' உடம்புக்காரியாக இந்தத் தேவதை வலம் வருவதை இந்தக் காணொலியில் காணலாம்.

இவள் பர்மா நாட்டுப் பைங்கிளி. பர்மிய மொழி உச்சரிப்பில் இவள் பேசுகிற ஆங்கிலம், ஆங்கிலேயனுக்கும் பர்மாக்காரனுக்கு புரியுமா தெரியவில்லை. நம்மவர்க்குப் புரிவது சந்தேகம்தான்.

அங்காடிப் பகுதிகளில் உலா வந்து மழலைக் குரலில் ஏதேதோ சொல்லி நம் செவிகளில் தேன் பாய்ச்சுகிறாள்.  

ஊன்றிக் கவனித்தால் புரியக்கூடும். கள்ளம் கபடமற்ற இவளின் முக அழகை ரசிப்பதில் முழு நேரமும் கழிவதால், பேச்சைக் கவனிப்பது சாத்தியப்படாது.

முகம் காட்டி நடக்கிறாள்; முதுகு காட்டியும் நடந்து செல்கிறாள். எதைக் காட்டியும் காண்போரைக் கவரும் எண்ணமெல்லாம் இவளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சூதுவாதற்ற ஒரு பதின்பருவக் குழந்தையாகத்தான் தெரிகிறாள்.

இவளுடையது அன்ன நடையல்ல; தரை பார்த்து நடக்கும் நம்ம ஊர்ப் பெண்ணின் நாண நடையுமல்ல; நிமிர்ந்த நடை.

இவளின் நடை தளர் நடையல்ல; தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் நளின நடை.

பேசும்போதெல்லாம் சிரிக்கிறாள்; பேசி முடித்த பிறகும் சிரிக்கிறாள். சிரித்து இன்புறுத்துவதற்கென்றே பிறந்தவளோ என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

"பிரம்மன், இந்தத் தேவதையைப் படைத்து, மேலுதட்டில் ஒரு திருஷ்டிப் பொட்டும் இட்டு, பூந்தேரில் ஏற்றிவந்து, பர்மாவின் 'யாங்கோன்' தெருவில் இறக்கி விட்டுவிட்டுப் போனானோ!" என்று வியந்து மகிழ்ந்தேன்.

நன்றியும் நவின்றேன்.

காணொலி: