அது குறித்த விவரங்கள்:
சிவப்பு:
'துருப்பிடித்த அல்லது பிங்க் நிறம் போன்று விந்தின் நிறத்தில் மாற்றம் காணப்படுவது சரியானது அல்ல' [என்று 'க்நாக்ஸ்' எனும் மருத்துவர் தெரிவிக்கிறாராம்].
விந்தில் இரத்தம் கலந்தாலும்கூட அது சிவப்பாகக் காணப்படும்.
பால்வினை நோய்த் தொற்று, புரோஸ்டேட் சுரப்பிப் பிரச்சனை, வேறு மருத்துவ நிலைக் கோளாறுகள் போன்றவையும்கூட இப்படி விந்தின் நிறத்தைச் சிவப்பாக மாற்றக்கூடும்.
அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் கட்டி, சில வகைப் புற்றுநோய் போன்றவையும் விந்தின் வண்ணத்தைச் சிவப்பாக மாற்றம் செய்யலாம்.
மஞ்சள்:
சிறுநீர் செல்லும் குழாயில் சிறுநீர் தேங்கியிருந்தால், அதனுடன் கலந்து விந்து வெளிப்படும் போது அதன் நிறம் மஞ்சள் நிறமாக மாறும்.
மஞ்சள் காமாலை, மிகையான வெள்ளை இரத்த அணுக்கள், பால்வினை நோய்த் தொற்று ஆகியனவும் இதற்கான காரணிகளாக அமையக்கூடும்.
உண்ணும் உணவில் செயற்கை வண்ணக் கலப்பு காரணமாகவும் இது நேரலாம்.
உடல்நலக் கோளாறுகளுக்கு உட்கொண்டுவரும் மருந்தின் பக்க விளைவாக'வும் இது இருக்கலாம்.
பச்சை:
புரோஸ்டேட் சுரப்பியில் ஏதேனும் தொற்று, அதைச் சுற்றியிருக்கும் திசுக்களில் தாக்கம் போன்றவை விந்தின் வண்ணத்தைப் பச்சை ஆக்குகின்றன.
சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் கசிந்து, அது 'புரோஸ்டேட் சுரப்பி'யுடன் கலந்திருந்தால் விந்தின் நிறம் பச்சையாக மாற வாய்ப்புண்டு.
பழுப்பு மஞ்சள்:
உடலுறவு வைத்துக்கொள்வதற்கு முன்னர் ஆண் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், பழுப்பு மஞ்சள் நிறத்தில் விந்து வெளிப்படலாம். இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
கிரே ஒயிட்:
உங்களின் விந்து இந்த நிறத்தில் இருந்தால், "ஆகா, நானல்லவோ முழு ஆரோக்கியம் வாய்ந்த ஆண்மகன்!" என்று உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக்கொள்ளலாமாம்.
==========================================================================
*****"இன்று காலை 08.48 மணிக்கு ஒரு பதிவு வெளியிட்டாய். 12.00 மணிக்கு இன்னொரு பதிவா!" என்று மூக்கு நுனியில் விரல் பதிக்காதீர்.
ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல் 'இன்றிருப்பார் நாளை இல்லை' என்னும் நிலையாமைத் தத்துவம் என் அடிமனதில் வெகு அழுத்தமாகப் பதிந்திருப்பதால்தான், வாசிப்பில் வசப்படும் பயனுள்ள கருத்துகளையும், செய்திகளையும் உடனுக்குடன் பதிவு செய்து பகிர்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன்.
நன்றி.