செவ்வாய், 11 ஜனவரி, 2022

'சிகைக் காணிக்கை' செலுத்துவோரின் சீர்மிகு சிந்தனைக்கு!

மனிதர்கள் உட்பட, அனைத்து உயிர்களும் தமக்குத்தாமே 'இனவிருத்தி' செய்துகொள்ளுதல் வேண்டும் என்பது இறைவனின் ஆணை என்பார்கள் ஆன்மிகவாதிகள்.

மனித இனத்தின் விருத்திக்கு மனிதராய்ப் பிறந்த ஆணும் பெண்ணும் இணைவது அவசியம்.

இணையத் தூண்டுவது புணர்ச்சி வேட்கை.

புணர்ச்சி வேட்கை தோன்றுவதற்குக் காம உணர்ச்சி தேவை.

காமம் உண்டாவதற்கு, இனக் கவர்ச்சி இன்றியமையாதது.

கண்ணைக் கவரும் மீசை, அகன்ற மார்பு, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, எடுப்பான தோற்றம் என்றிவை ஆணுக்குக் கவர்ச்சி சேர்ப்பவை. பெண்ணுக்கு.....

பிறை நெற்றி, காதளவு நீண்ட காந்தக் கண்கள், செம்பவள உதடுகள், சங்குக் கழுத்து, அண்ணாந்து ஏந்திய கொங்கைகள், சிறுத்த இடை என்றிப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பொதுவில், கைகால் நகங்கள், தலைமுடி என்றிவற்றிலும் கவர்ச்சி என்பது இரண்டறக் கலந்தே இருக்கிறது. சுருங்கச் சொன்னால்.....

கடவுளின் படைப்பான ஆண்&பெண் உடல்களில் கவர்ச்சியற்றதும் தேவையற்றதுமாக  எந்தவொரு உறுப்பும் இல்லை, தலை மயிர் உட்பட

எனவே, கடவுளின் அருட்கொடையான அனைத்து உறுப்புகளையும் பொறுப்புடன் பராமரிப்பது ஆண், பெண் என்னும் இருபாலாரின் கடமையாகும்.

கடமை தவறுவது, குறிப்பாக, 'முடி காணிக்கை' என்னும் பெயரில் 'மொட்டை' போட்டு, கடவுள் மனிதர்களுக்கு வழங்கிய அழகிய முடியை அவரிடமே திருப்பித் தருவதானது அவரை இழிவுபடுத்தும் செயலாகும்.

முடியைக் காணிக்கையாகச் செலுத்துவதை விரும்பாத கடவுள்கள் எல்லாம் காணிக்கையாளர்களை மன்னிப்பார்களாக!

இந்தத் தவற்றை இப்போதும், இனி எப்போதும் நம் பக்தர்கள் செய்யமாட்டார்கள் என்று நம்புவோம்.

==========================================================================