எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

அந்தரங்கக் 'கூட்டு'றவுச் சுகங்கள்!!!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருக்காச்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வாரம், தனது கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் கொடுமைப்படுத்துவதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார். 

காவல்துறையினர் பெண்ணின் கணவரைக் கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைத்தன என்பது, இன்றைய 'மாலை மலர்'ச் செய்தி[https://www.maalaimalar.com/news/topnews/2022/01/11112421/3379804/Tamil-News-750-couples-joined-change-wives-gang.vpf  -ஜனவரி 11, 2022 11:24 IST

கேரளாவில் கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா பகுதிகளைச் சேர்ந்த சிலர் இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரகசியக் குழுக்கள் தொடங்கி உள்ளனர். இந்தக் குழுக்களில் உறுப்பினர்களாக இருப்போர் அவ்வப்போது, ஏற்பாடு செய்யப்படும் ரகசிய இடங்களில் சந்தித்து அவரவர் விருப்பம்போல் பிறர் மனைவியுடன் கூடிக்களிப்பதை வழக்கமாகச் கொண்டுள்ளனராம்.

நேற்றையத் தொலைக்காட்சி ஊடகங்களிலும், இன்றையக் காலை நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும் இது தொடர்பான தகவல்கள் வெளியாகிப் பரபரப்பூட்டியதைப் பலரும் அறிந்திருக்கலாம்.

ஆகவே, இந்தக் குழுவினர் குறித்த, பிற தகவல்களை இங்கு விவரிப்பது தேவையற்றதாகும்.

இவர்களின் அதி நவீனமானதும், அதிர்ச்சி தருவதுமான நடவடிக்கையை விமர்சிப்பது மட்டுமே நம் நோக்கமாகும்.

மனைவிகளை மாற்றிக்கொள்கிற இவர்களின் சந்திப்புக்கு, குழு உறுப்பினர்களின் வீடுகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும், உறுப்பினர் அல்லாதார் எவரையும் கலந்துகொள்ள அனுமதிக்காததால் சமூகக் கட்டுப்பாடுகளை இவர்கள் மீறவில்லை என்பதும் அறியத்தக்கது[கணவனின் மிரட்டல்தான் மேற்குறிப்பிடப்பட்ட பெண்ணைப் புகார் செய்யத் தூண்டியிருக்கிறது].

இந்தச் செய்தியை வாசித்தவுடனே என்னுள் உதித்த மகத்தானதொரு கேள்வி.....

ஒருத்தியுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஒரே நேரத்தில் உறவு கொள்ள விரும்பினாலோ, ஒருவனுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே சமயத்தில் சுகித்திருக்க ஆசைப்பட்டாலோ எழும் பிரச்சினைக்கு இவர்கள் எப்படித் தீர்வு கண்டிருப்பார்கள்?!

வேறென்ன, சீட்டுக் குலுக்குவதுதான்![நாணயத்தைச் சுண்டி, 'பூவா தலையா'வும் பார்த்திருக்கலாம்] ஹி... ஹி... ஹி!!!

காவல்துறைத் தகவல்களின்படி, இப்போதைக்கு இந்தக் குழுவில் 1500[750 ஜோடி] பேர் உறுப்பினர்களாக இருப்பதாகத் தெரிகிறது. அந்த எண்ணிக்கை 15000 ஆக இருப்பினும் அது குறித்துப் பிறர் ஆதங்கப்படுவதற்கோ, அவதூறு பரப்புவதற்கோ உரிமை இல்லை என்று சொல்லலாம், ஆசைப்பட்டபடியெல்லாம் அனுபவிப்பது தங்களின் பிறப்புரிமை என்று அவர்கள் சொல்லக்கூடும் என்பதால்.

15000 என்பது 15 லட்சமாக ஆனாலும்கூட, அவர்கள் தங்களுக்கென்று தனி நாடும் தன்னாட்சி உரிமையும் கேட்காதவரை பிரச்சினை இல்லை எனலாம்.

உடம்பில் தினவு இருக்கும்வரை, 'என் மனைவி, உன் மனைவி என்னும் பேச்சுக்கே இங்கு இடமில்லை; எல்லாரும் நம் மனைவிகளே' என்று எண்ணும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் அவர்கள்.

விதம் விதமாய் லேகியங்களையும் வகை வகையாய் வயாகராக்களையும் விழுங்கினாலும் 'அது' இனி முடியாது; முடியவே முடியாது என்னும் நிலை வந்தால் மட்டுமே, ஆட்டம் அடங்கி அவர்கள் வீட்டோடு முடங்குவார்கள்.

அவர்கள் எக்கேடுகெட்டோ போகட்டும். அவர்களுக்கு ஒன்றோ, இரண்டோ, பலவோ என்று பிள்ளைகள் இருந்தால், மணமான பிறகு அவர்களும் இவர்களின் வழியைத்தான் பின்பற்றுவார்கள்.

இந்த நிலை தொடர்கதையானால், 'அந்தரங்கக் கூட்டுறவுச் சுகம்' காண விழையும் தம்பதியர் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக்கொண்டே போகும்தானே?

ஆமாம், எதிர்காலத்தில் அவர்களே இங்கே பெரும்பான்மையினராக இருப்பார்கள். கற்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு பற்றியெல்லாம் பேசுகிற பித்துக்குளிகள் மிகச் சிறுபான்மையினர் ஆவார்கள். அவர்களும்கூட, இவை பற்றிப் பொது இடங்களில் வாய் திறக்க மாட்டார்கள். 

காலவெள்ளத்தில், பெரும்பான்மை சிறுபான்மையாகி உள்ளே அமுங்கிப்போவதும், சிறுபான்மை பெரும்பான்மையாகி மேலெழுவதும் அதிசய நிகழ்வுகள் அல்ல!

==========================================================================