பெரியாரை ஒருவர் சந்தித்தார்.
"கடவுள் இல்லை... இல்லை... இல்லவே இல்லைன்னு சொல்லிட்டிருக்கீங்க. உண்மையில் கடவுள் இருக்கிறார்னு தெரிஞ்சா என்ன சொல்வீங்க?" என்று அதிரடியாக ஒரு கேள்வியையும் கேட்டுவைத்தார்.
'கடவுள் இல்லேன்னு எவ்வளவோ எழுதியும் பேசியும் இருக்கேன். திருந்தாத ஜென்மங்கள் இன்னமும் இருக்கே'ன்னு பெரியார் மனதுக்குள் வருத்தப்பட்டிருக்கக்கூடும். ஆனாலும், 'கடவுள் இருக்கார்னு சொல்லிட்டுப்போறேன்' என்று அவரிடம் சொன்னதாக ஏடுகளில் அன்று செய்தி வெளியானது.
இப்படியானதொரு கேள்வியைச் சிறியேன்['பசி'பரமசிவம்] ஆகிய என்னிடம் ஒருவர் கேட்டிருந்தால்.....
"நானொருவன்[கடவுள்] இருப்பது உண்மைதான் என்று கடவுளே மனிதர்களைச் சந்தித்துச் சொன்னாலொழிய, அவர் இருப்பதை யாராலும் நிரூபிக்க முடியாது. இப்போ 'கடவுள் இருக்கார்'னு சொல்லுறீங்க என்றால், நீங்க மனிதரல்ல; நிச்சயம் கடவுளாகத்தான் இருக்கணும்" என்று சொல்லி, நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்திருப்பேன்.
கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அவர்.....
'ஓ... ஒரு முழு மெண்டல்கிட்டே வசமா மாட்டிகிட்டமே'ன்னு பயந்து நடுங்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்திருப்பார் என்பது என் அனுமானம்!
என் புத்திசாலித்தனத்தை மெச்சுகிறீர்கள்தானே?
ஹி... ஹி... ஹி!!!
===============================================================