"அழகான இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் மனசுக்குள் உற்சாகம் பிறக்குது" -தன் மகிழ்வுந்துப் பயணத்தின்போது, கவின்மிகு ஸ்காட்லாந்தின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே இப்படிச் சொல்பவர், அந்த நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தமிழ்ப் பெண்.
காரில் பயணித்துக்கொண்டே, சாலையின் இருபுறமும் சாரி சாரியாய் அணிவகுத்துக் காட்சியளிக்கும் பல்வகைப் பச்சைப்பசேல் தாவரங்களையும், இறுமாந்து நிற்கும் மரங்களையும், பிரமாண்ட மலைகளையும் தன் மழலை கலந்த ஈழத்துக் கொஞ்சு தமிழில் வர்ணிக்கிறார் அவர்.
காணும் காட்சிகளெல்லாம் நம் கண்களுக்கு விருந்தாக, அந்த வர்ணனை நம் காதுகளுக்கான விருந்தாக அமைகிறது.
அழகுக் காட்சிகளில் லயித்துப்போய் அவர் அமைதி காக்கும்போதெல்லாம் ஒலிக்கும் இனிமையான பின்னணி இசை நம் நெஞ்சுக்கு இதமளிக்கிறது.
இவ்வாறு, நாம் இருந்த இடத்தில் இருந்தவாறே, ஸ்காட்லாந்தின் அழகை ஆசைதிர ரசித்து மகிழும் அனுபவத்தை அளிக்கிறது அவர் வெளியிட்டுள்ள காணொலி. அவர்?
'என் பக்கம்' என்னும் வலைப்பக்கத்தின் உரிமையாளரும் சக பதிவருமான 'அதிரா' அவர்கள்.
அவருக்கு நம் நன்றி.
அவரின் 'Driving To Inverness City| Scotland 🏴 | Beautiful Sceneries' என்னும் youtube காணொலி கீழே.