பிரித்தானியாவில் பிறந்தவரும் ராணுவ அதிகாரியுமான சீக்கியப் பெண் 'ப்ரீத் சண்டி' தென் துருவத்திற்குத் தனியாகப் பயணம் செய்து வரலாறு படைத்துள்ளார்[https://www.ndtv.com/offbeat/british-sikh-woman-preet-chandi-makes-history-with-solo-trip-to-south-pole-2687467] என்பது நேற்றைய[ஜனவரி 04, 2022 10:37 am IST] செய்தி.
'தென் துருவத்திற்கு ஒரு தனிப் பயணத்தை முடித்த முதல் 'வண்ணப் பெண்'[Women of color is a phrase used to describe female non-whites. The political term "women of color" surfaced in the violence against women movement. -Wikipedia] என்ற பாராட்டைப் பெற்றுள்ளார் இவர்
'கடந்த ஆண்டு நவம்பரில், அண்டார்டிகாவின் ஹெர்குலிஸ் இன்லெட்டில் இருந்து தன்னந்தனியாக இவர் தன் பயணத்தைத் தொடங்கியது ஒரு சாதனையின் தொடக்கமாகவும் அமைந்தது' என்கிறது 'சிஎன்என்' செய்தி.
பனிப்பொழிவு மிக அதிகமாக உள்ள தென் துருவத்திற்குச் சென்று, சில வாரங்கள் அண்டார்ட்டிகா முழுவதும் தனியாகப் பனிச்சறுக்கு விளையாடிய இந்தச் சாதனைப் பெண், 700 மைல் (1126 கிமீ) மலையேற்றத்தை 40 நாட்களில் முடித்ததாராம். இதை ஜனவரி 3இல் தன் வலைப்பக்கப் பதிவில் குறிப்பிட்டார்.
"அண்டார்டிகா பூமியில் மிகவும் குளிரான, உயரமான, வறண்ட மற்றும் காற்று வீசும் கண்டமாகும். அங்கு யாரும் நிரந்தரமாக வசிக்கவில்லை. நான் முதலில் திட்டமிடத் தொடங்கியபோது அந்தக் கண்டத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது, அதுதான் என்னை அங்குச் செல்லத் தூண்டியது" என்று முன்பு கூறியிருந்தார் சண்டி.
அவர் தனது தென் துருவச் சாகசத்திற்கான பயிற்சிக்காக[ஆல்ப்ஸில் க்ரீவாஸ் பயிற்சி & ஐஸ்லாந்தில் மலையேற்றம்] இரண்டரை ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார்.
தன் பயணத்தின்போது கிட்டத்தட்ட 90 கிலோ எடையுள்ள ஒரு பல்க் அல்லது ஸ்லெட்ஜை இழுத்துச் சென்றுள்ளார். அவரது கிட், எரிபொருள், உணவு ஆகியவற்றையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார்.
பிரிட்டிஷ் இராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் தலைவர், இந்தச் சாதனைக்காக திருமதி சண்டிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கட்டிளங் காளையரே இம்மாதிரியான ஆபத்தான செயலில் இறங்கத் தயங்குகிற இந்தக் காலக்கட்டத்தில், 'பிரீத் சண்டி'யின் துணிச்சல் பிரமிப்பூட்டுகிறது!
நம்ம ஊர் இளவட்டப் பெண்களும் எதிர்காலத்தில் இத்தகு சாதனைகளை நிகழ்த்திப் புகழ் பெறுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.
திருமதி சண்டி அவர்களுக்கு நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
==========================================================================