எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 9 பிப்ரவரி, 2022

"இவர்கள் இதற்காகவும் அழுகிறார்கள்"... காணொலி சொல்லும் கதை!!![1க்குள் 2]

திருமண நிகழ்வுகளில் 'மொய்' வைக்கும் நடைமுறை இருப்பது யாவரும் அறிந்ததே. இதைப் போல  'இழவு' வீடுகளில் 'மொய்' வைக்கும் வழக்கம் உள்ளதா?

'மொய் என்பது தனிநபர்கள் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பணமாக அளிக்கும் பரிசு ஆகும். மொய்யில் மூன்று வகைகள் உண்டு. திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய் என்பது ஒருவகை; இது அன்பளிப்பு ஆகும். நிதித் தேவையை நிறைவு செய்யும் எண்ணத்துடனே ஏற்பாடு செய்யப்படும் மொய்விருந்து என்பது இன்னொருவகை. இது திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் போன்றது. மூன்றாவது இறப்பின்போது இழவு வீட்டில் செய்வது. https://ta.wikipedia.org/

இழவு வீடுகளில் 'மொய்' வைப்பது மிக அரிதான நிகழ்வு என்றே சொல்லத் தோன்றுகிறது. 

திருமணம் என்பது திட்டமிட்டுச் செய்வது. அதற்கான செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைத் திருமணம் நிகழ்த்துவோர் முன்கூட்டியே கணித்துவிடுவதால், பணமுடை ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும்.....

எதிர்பாராமல் அதிகரிக்கும் பணச் செலவைச் சமாளிக்க, நிகழ்வில் கலந்துகொள்ளும் உறவினர்களும் நண்பர்களும் 'மொய்' வைத்துப் பண உதவி செய்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, எதிர்பாராமல் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிடும்போது, சவ அடக்கத்துக்கும் சடங்குகளுக்கும் தேவைப்படும் குறைந்தபட்சச் செலவுகளுக்குக்கூடப் பணம் திரட்ட இயலாமல் தவிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

எனவே,

இழவு வீடுகளில் 'மொய்' வைப்பதை வழக்கப்படுத்தினால், இத்தகையவர்களுக்கு இது மிகவும் பயனளிப்பதாக அமையும் என்று பரிந்துரைக்கும் வகையில், நேற்று(08.02.2022] 'காணொலி' ஒன்று வெளியானது[வெளியிட்டவருக்கு நன்றி].


இதனைப் பலருடன் பகிர்வது மிக அவசியம் என்பதால் இங்குப் பதிவு செய்து வெளியிடப்படுகிறது.

நன்றி. 
==========================================================================
செய்தி புதுசு![கூடுதல் பதிவு]:

https://www.bbc.com/tamil/science-60298274 இல் சற்று முன்னர், கீழ்க்காணும் தலைப்பிலான ஒரு புத்தம் புதியதும், மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதுமான ஒரு செய்தியைப் படித்தேன். 

'உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர் - தொழில்நுட்ப அதிசயம்'

நீங்களும் வாசித்து மகிழ்தல் வேண்டும் என்பது என் விருப்பம். முகவரியைக் 'கிளிக்' செய்யுங்கள்.