புதன், 2 பிப்ரவரி, 2022

ஒரு கற்புக்கரசன் 'கலியுக இராமன்' ஆன கதை!!!

ஒரு கற்புக்கரசன், ஒரு கற்புக்கரசியின் கற்பின் மீது சந்தேகப்பட்டான்.

இந்தச் சந்தேகத் தீ கணவன் மனைவியாக வாழ்ந்த இருவருக்குமிடையே அடிக்கடி, கடும் வாக்குவாதத்தை உண்டுபண்ணியது.

ஒரு நட்ட நடுராத்திரி வேளையில் அந்தக் கற்புக்கரசனின் நெஞ்சில் கற்புக்கரசியின் மீதான சந்தேகத் தீ கொழுந்துவிட்டு எரிய, "நீ நிஜமான பத்தினியாக இருந்தால், உன் மகளை[இந்தப் பிஞ்சு இவனுக்குப் பிறந்ததல்ல]த் தீயிட்டுக் கொளுத்து" என்று ஆக்ஞை பிறப்பித்தானாம்.

அவள் கற்புக்கரசியல்லவா, கணவன் சொல்லைத் தட்டாமல், தான் பெற்றெடுத்த பிள்ளையான  பவித்திரா மீது மண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்தாளாம்.

ஒரு பாவமும் அறியாத அந்தப் பிஞ்சு, 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது.

'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதுதான் நம் முன்னோர் வகுத்த வாழ்க்கை நெறி; அதுவே 'கற்பு நெறி' என்றும் போற்றப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட கற்புக்கரசனுக்கு இது 2ஆவது திருமணம். கற்புக்கரசிக்கோ  3ஆவது.

அவன் 'கலியுக இராமன்' ஆக மாறி, உத்தரவு பிறப்பிக்க அவளும் அதை நிறைவேற்றினாள் என்பது நம்பும்படியாகவா இருக்கிறது? 

"உணவு உண்ட நேரம்; உறங்கிய நேரம் தவிர எஞ்சிய நேரமெல்லாம் சரச சல்லாபம் புரிந்திருப்பார்களோ? அதற்கு இந்த மொட்டு இடைஞ்சல் செய்தது என்று தீயிட்டுக் கொளுத்தியிருப்பார்களோ?" என்றெல்லாம் நம் மனதில் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இவர்களின் பெயர், வயது, வாழிடம் போன்றவற்றைக் குறிப்பிடுவதால் 90% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் சிறுமி  உயிர் பிழைப்பாள் என்பது என்ன நிச்சயம்?[அவள் பிழைத்தெழுந்து நல்லவர்களின் ஆதரவுடன் நீண்ட காலம் வாழ்தல் வேண்டும் என்பதே நம் விருப்பம்]. ஆகவே.....

இந்தக் கலிகாலக் கற்பரசன், கற்பரசி ஆகியோர் பற்றிய முழு விவரங்களை அவசியம் அறிந்திட வேண்டும் என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்லுங்கள்.

https://tamil.oneindia.com/news/chennai/mother-killed-own-daughter-due-to-family-issue-near-chennai/articlecontent-pf647435-447158.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Auto-Deep-Links   -Monday, January 31, 2022,