அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

கண்ணுக்குத் தெரியும் கடவுள்கள்!!!

இந்தியாவில் பரவலாக பசுக்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இதுதவிர பாம்பு[நாகதேவன்], நாய் போன்றவற்றையும் வழிபடும் வழக்கம் உள்ளது. 

விலங்குகளைக் கடவுளாக்கி வழிபடாத மக்களே உலகில் இல்லை என்று சொல்லலாம்.

பட்டியல் காணீர்!

புலி

'கொரியா' நாட்டுப்புறக் கதைகள் புலியை ஒரு தெய்வீக ஆவி என்று கூறுகின்றன.  குறிப்பாக வெள்ளைப்புலிகள் மிகவும் புனிதமானவை என்று கொரிய மக்கள் நம்பி வழிபடுகிறார்கள்.

நேபாளத்திலும் வியட்நாமிலும்கூட, புலியைத் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

நாய்

நேபாளத்தில் நாய்க் கடவுளுக்கென்று திருவிழா நடத்தப்படுகிறது.

திருவிழாவின் போது, நாய்களுக்குச் சுவையான உணவளிக்கப்படுகிறது,  அவை சாமந்திப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றன. நாய்கள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன (ரிக்-வேதம், சம வேதம், யஜூர்-வேதம், மற்றும் அதர்வ-வேதம்) என்றும் இந்த நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.

பன்றி

பண்டைய எகிப்திய மக்கள் பன்றிகளை புனிதமாகவும் ஒரு முக்கியமான தெய்வமாகவும் கருதினர். புயல்கள், குழப்பங்கள், பாலைவனங்கள் மற்றும் இருள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் நிமிர்ந்த முட்கள் கொண்ட பன்றியாக அவர்களின் தெய்வம் தோன்றுமாம். 

சீனாவில், இராசி படி, பன்னிரண்டு நல்ல விலங்குகளில் பன்றிகளும் ஒன்று. செல்ட்ஸ் மொக்கஸ் என்ற ‘பன்றிக் கடவுளையும்' வணங்கினார்கள் அவர்கள். விழா நடத்தி, பன்றி இறைச்சி சமைப்பது சடங்குகளில் ஒன்றாகும்.

'பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்றார்' என்னும் புராணக் கதையை நினைவுகூர்க. 

யானை என்னும் பிள்ளையார் சாமி!

இந்துக்கடவுள்களில் இவருக்கு நிகரானவர் எவருமில்லை. நாள்தோறும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம் மக்க்ளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆடு ஓர் ஆடம்பரக் கடவுள்!

சிரியாவில் பண்டைய காலங்களில், ஆடுகள் கடவுள்களாகப் போற்றப்பட்டு, விழாக்களின்போது  வெள்ளி நெக்லஸால் அலங்கரிக்கப்பட்டன.

ஆப்பிரிக்கா மக்களும் ஆடுகளைத் தங்கள் முதன்மை தெய்வமாக கருதுகின்றனர். 

கிரேக்கர்கள்  'பான்' ஆடுளைத் தெய்வங்களாக வழிபட்டனர். 

ரோமானியர்கள் ஒரு ஆட்டை உயிரோடு சாப்பிடுவது ஆட்டுக் கடவுளுக்கான ஒரு வழிபாட்டு முறை 

குதிரை 

இவ்வழிபாடு, பெரும்பாலும் இந்தோ-ஐரோப்பிய மற்றும் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படுகிறது. இந்தியாவிலும் இவ்வழக்கம் உள்ளது.

கழுதை

ரோமானியர்களுக்குக் குதிரை மட்டுமல்லாது, கழுதையும் ஒரு வழிபடு கடவுளே!

இந்தியாவில் கோண்ட்ஸ் பழங்குடி மக்கள் கல் வடிவக் குதிரையை வணங்குகிறார்கள்.

பூனை

பண்டைய எகிப்து மக்கள் பூனை வழிபாட்டிற்குப் பெயர் பெற்றவர்கள்.  ஒரு பூனையைக் கொல்வது எகிப்தியர்களிடையே தண்டனைக்குரிய குற்றமாகும், 

சிங்கம் 

துர்கா தேவி தனது வாகனமாகச் சிங்கம் வைத்திருப்பதை இந்து கலாச்சாரம் சித்தரிக்கிறது. 

ஓநாய்  துருக்கிய புராணங்களின்படி அவர்கள் ஓநாய் சந்ததியினர் என்று நம்புகிறார்கள். பூர்வீக அமெரிக்கர்கள் கூட ஓநாயைக் கடவுளாக வணங்கினர், 

கழுகு 

பூர்வீக அமெரிக்கர்களின் மிகவும் மதிக்கப்படுவது கழுகு. இதன் இறகுகளை வைத்திருப்பது பூர்வீக அமெரிக்க கலாச்சாரத்தில் கௌரவமாகக் கருதப்படுகிறது, மேலும், இவற்றைத் தலைக்கவசத்தில் அணிந்தவர் தைரியமான செயலைச் செய்து புகழ்  சம்பாதிப்பார் என்று நம்பப்படுகிறது. இந்து கலாச்சாரத்தில், ‘கருடா' (கழுகு) என்பது விஷ்ணுவின் வாகனமாக கருதப்படுகிறது.

!!!!! கண்ணுக்குத் தெரியாத கற்பனைக் கடவுள்களுக்கு விதம் விதமாய்ப் பெயர்கள் சூட்டி வழிபட்டுக் காலங்காலமாய்த் தம் பொன்னான நேரத்தை வீணடித்தார்கள் நம் முன்னோர்கள். நாமும் வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.

அவற்றைக் காட்டிலும் பார்வையில் படுகிற ஜீவராசிகளை வணங்குவதால், மனிதர்களுக்குப் பயன் இல்லையென்றாலும், இவர்களால் அதுகளுக்கு உண்டாகிற துன்பங்களின் அளவு குறைகிறது என்பதில் சந்தேகமில்லை.

சாமி கும்பிடாவிட்டால் உண்ணும் உணவு செரிக்காது; இரவில் உறக்கம் வராது என்று நம்பும் பக்தர்கள் தமக்குப் பிடித்த விலங்குகளையும் பறவைகளையும் வணங்கி மனநிறைவு பெறலாம்.

வாழ்க விலங்குகள்! வளர்க விலங்கு பக்தி!!

==========================================================================

ஆதாரம்: https://tamil.boldsky.com/insync/pulse/sacred-animals-from-different-cultures/articlecontent-pf208376-027967.html