வெள்ளி, 8 ஏப்ரல், 2022

இச்சை[காமம்] குறித்துக் கொச்சையாய் ஒரு கேள்வி!!!

கன்னியாகுமரியில் காதலனுடனான கள்ள உறவை நீட்டிக்க, சேமியா உப்புமாவில் விஷம் கலந்து ஒன்றரை வயதுக் குழந்தையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார். மூத்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது[https://tamil.news18.com/videos/tamil-nadu/kanniyakumari-district-mother-killed-her-baby-in-kanniyakumari-lill-727699.html].

இது, நேற்று[07.04.2022] அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்தி. நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால், இதை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவதல்ல என் நோக்கம்; நேற்றிரவு நெடுநேரம் என் நெஞ்சை உறுத்திய ஒரு கேள்வியை உங்களுடன் பகிர்வது மட்டுமே.

உடலுறவு இச்சையைப் பொருத்தவரை அன்பு, பரிவு, பாசம், பற்று, கருணை, மனித நேயம், சாதி, மதம், இனம் என்று எதுவுமே ஒரு பொருட்டல்ல என்பதை அது தொடர்பான பல வன்முறை நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. 

இந்த இச்சை உச்சத்தைத் தொடுமேயானால் இச்சைக்குள்ளாகும் நபர் முற்றிலுமாய்த் தன்னை இழக்கிறார்; அதைத் தணிப்பதற்கு எந்தவொரு ஈனச் செயலையும் அவர் செய்யத் தயங்குவதில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் காட்ட இயலும்.

மேற்கண்ட நிகழ்வு அவற்றில் ஒன்று.

இரு குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு தாய், தன் கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களுக்கு விஷம் கொடுத்தாள் என்பது செய்தி.

இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துவிட்ட நிலையில் கள்ள உறவு தேவையா என்பதல்ல நம் கேள்வி[இது குறித்த விவாதத்திற்கு இங்கு இடமில்லை].].

அந்த உறவுக்கு இரு குழந்தைகளும் எந்த அளவுக்கு இடையூறாக இருந்தன என்பதே நாம் எழுப்பும் வினா.

ஓர் ஆணும் பெண்ணும் உடலுறவின் மூலம் அதிகபட்ச சுகத்தைப் பெறுவதற்குத் தேவைப்படும் நேரம் எவ்வளவு?

அரை மணி நேரம்? 

ஊஹூம்.

ஒரு மணி?

போதாது.

கொச்சை மொழி பேசிக் கொஞ்சுவது; பிறந்த மேனியராய் நின்றும் இருந்தும் ஓடியும் ஆடியும் பரஸ்பரம் கண்டு ரசித்துச் சுகிப்பது; முன்விளையாட்டு, பின்விளையாட்டெல்லாம் நடத்தி முடித்து, ஈருடல் ஓருடலாகிச் சொர்க்கம் சென்று திரும்புவது என்று இந்தப் புணர்தல் போகத்திற்குத் தேவைப்படுவது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் என்று கொள்வோம்[காலநேரம் கருதாமல் கலவி புரிபவர்களும் உளரோ?!]

கள்ள உறவை நாடும் ஒருத்திக்கு, ஒரு நாளில் இந்தக் கால அவகாசம் வாய்ப்பது சாத்தியமானதுதான்.

காலையில் வேலைக்குப் போகும் கணவனும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் மாலையில் வீடு திரும்பும்வரையினான அந்தச் சில மணி நேரங்களைத் தனக்கே தனக்கானதாக ஆக்கிக்கொள்ள முடியும்.

பள்ளிக்குப் போகும் வயதை எட்டாமல், வீட்டோடு குழந்தைகள் இருப்பது இடையூறுதான் என்றாலும், பகல் நேரத்தில் அவை உறக்கம் கொள்வது இயல்பு என்பதால் அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.

எதிர்பாராத பணி நிமித்தம் கணவன் வெளியூர் செல்லும் நாட்களில், குழந்தைகளை உறங்கச் செய்த பிறகு, இரவு முழுக்க ஆசைநாயகனுடன் 'இருந்து' இன்ப உலகில் சஞ்சரிக்கலாம்.

அண்டை அயலில் நெருங்கிய சொந்தபந்தங்கள் இருந்தால், சாக்குப்போக்குச் சொல்லி, குழந்தைகளை ஒப்படைத்துவிட்டுக் காதலனுடன் ஒதுங்குதற்கான இடம் தேடலாம்.

ஆக, இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ 'அது'க்கான வாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமாக இருக்கும்போது, இடையூறாக இருப்பதாக நினைத்து விஷம் கொடுத்தோ, கழுத்தை நெறித்தோ குழந்தைச் செல்வங்களைக் கொல்லும் கொடூரச் செயல்களை ஏன் செய்கிறார்கள்?

கடவுள் குறித்த கேள்விகளுக்கு மட்டுமல்ல, கள்ள உறவு குறித்த இம்மாதிரியான கேள்விகளுக்கு விடை காண்பதும்கூட அத்தனை எளிதல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது!

==========================================================================