பக்கங்கள்

வியாழன், 14 ஏப்ரல், 2022

"இந்தியர்கள் ஏழைகள்! இந்தியா ஏழை நாடல்ல!!"... சுவிஸ் வங்கி இயக்குநர்.

'சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் தங்கள் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல்களைத் தானாகப் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம், இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே கையெழுத்தாகியுள்ளது.

இதன்படி, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்து முதல்முறையாக இந்தியாவுக்குத் தகவல்களை அளித்தது. ஆண்டுதோறும் அந்நாடு தகவல் அளிக்க வேண்டி உள்ளது. 

கடந்த ஆண்டின் இறுதியில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருந்த முதலீடு ரூ.20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில், இந்த முதலீடு ரூ.6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. இதன்மூலம், கடந்த 2 ஆண்டுகளாகக் குறைந்து வந்த முதலீடு, தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இதுதான் அதிகபட்ச அதிகரிப்பின் அளவாகும். 

இந்தியர்கள், பங்கு பத்திரங்கள், சேமிப்புப் பத்திரங்கள் போன்றவற்றின் மூலம் மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் ஆகும். இந்தியாவில் உள்ள சுவிஸ் வங்கிக் கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக இந்தியர்கள் மேற்கொண்ட முதலீடும் இவற்றில் அடங்கும். அதே சமயத்தில், சுவிஸ் வங்கிகளில் இந்திய வாடிக்கையாளர்கள் போட்டு  வைத்துள்ள பணம், தொடர்ந்து 2ஆவது ஆண்டாகக் குறைந்துள்ளது. இவை சுவிஸ் தேசிய வங்கிக்கு அந்நாட்டு வங்கிகள் அளித்த புள்ளிவிவரங்கள் ஆகும். இவற்றில், கருப்புப் பணம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை'[https://www.dailythanthi.com/News/World/2021/06/18045239/Indians-funds-in-Swiss-banks-rise-to-over-Rs-20000.vpf ]  -ஜூன் 18,  2021 04:52 AM

இது அண்மைச் செய்தி. 8 ஆண்டுகளுக்கு முன்பே, 2013இல் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலில்[['புத்தறிவுப் புதையல்', [கி.பாஷ்யம்; முதல் பதிப்பு: டிசம்பர், 2013],

'108 லட்சம் கோடி இந்தியப் பணம் சுவிஸ் பேங்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது' என்று சுவிஸ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவர் கூறினார்' என்பதான செய்தி வெளியாகியுள்ளது.

அவர் மேலும்,

"இந்தியர்கள் ஏழைகள். ஆனால், இந்தியா ஏழை நாடல்ல. சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியப் பணம் 108 லட்சம் கோடியை வைத்து 30 ஆண்டுகளுக்கு வரியில்லாத பட்ஜெட் போடலாம். அனைவருக்கும் வேலை தரலாம். முதியோர் நலனைப் பாதுகாக்கலாம். இப்படி நல்ல காரியங்களுக்குப் பயன்பட வேண்டிய 108 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் சும்மா தூங்கிக்கொண்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

8 ஆண்டுகளுக்கு முந்தையத் தகவலின்படி 108 லட்சம் கோடி! இப்போது???

==========================================================================