உலக அளவில் ஓட்டப் பந்தயங்களில் சாதனை படைத்த 'உசேன் போல்ட்' எடுத்துக்கொண்ட நேரத்தை விடவும்[கடந்த 2009ஆம் ஆண்டில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை இவர் 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தார்] சுமார் 3 மடங்கு நேரத்தில் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தை ஓடிக் கடந்த ஒரு முதியவரை இன்றைய இணைய உலகம் கொண்டாடிவருகிறது. 100 மீட்டர் தொலைவைக் கடக்க 27.08 நொடிகளை எடுத்துக்கொண்ட அந்த முதியவர்.....
'சவாங் ஜன்ப்ராம்' என்பவர். இவரின் வயது 102.
தாய்லாந்தில் நடைபெறும் வருடாந்திர மாஸ்டர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 4 முறை இவர் பங்கேற்றுள்ளார். குறிப்பாக, '100 மீட்டர் ஓட்டம்', 'ஜாவ்லின் த்ரோ' மற்றும் 'டிஸ்கஸ் த்ரோ' ஆகிய போட்டிகளில் இவர் பங்கேற்பது வழக்கம்.
கடந்த வாரத்தில் 26ஆவது சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்தின் சமுத் சோங்கிராம் மாகாணத்தில் நடைபெற்றது. 100-105 வயது வரையிலான பிரிவினருக்கு நடத்தப்பட்ட அனைத்துத் தடகளப் போட்டிகளிலும், சக போட்டியாளர்களை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார் சவாங் ஜன்ப்ராம்.
சவாங் தினசரி தனது 70 வயது மகள் சிரிபானுடன் நடைப் பயிற்சி செய்கிறார். வீட்டுத் தோட்டத்தில் உதிர்ந்து விழும் இலைகளைக் கூட்டிப் பெருக்குவது உள்பட, சின்னச் சின்ன வீட்டு வேலைகளையும் இவர் செய்கிறார்.
தன் தந்தை எப்போதுமே நேர்மறையாகச் சிந்திப்பவர் என்றும், ஆகவேதான் அவரது உடல் நலனும், மன நலனும் பலமாக இருக்கிறது என்றும் அவருடைய மகள் 'சிரிபான்' ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது நம்மைக் கவர்வதாக உள்ளது.
ஒரு 102 வயது வாலிப வயோதிகக் கிழவர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது மிக்க மகிழ்ச்சி தரும் செய்திதான்.
இந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் நமக்குப் பெரு மகிழ்ச்சி தருவதாக உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த கிழவி ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை நிகழ்த்தினார் என்னும் செய்தி[https://www.hindutamil.in/news/supplements/penn-indru/742030-women-360.html -வெள்ளி, ஏப்ரல் 2022]
வாலிபக் கிழவியின் வயது 105. இவரின் பெயர்: 'ஜூலியா'[இவர் 100 மீட்டரை 62 நொடிகளில் கடந்தார்.
கிழவர் 102 வயதில் சாதித்ததைக் கிழவியார் 105 வயதில் சாதித்தார் என்பதைக் கருத்தில் கொள்க!
"ஓட்டப் பந்தயங்களில் கிழவர்களைப் போல் சாதனை நிகழ்த்தும் கிழவிகளால், 'அது' விசயத்தில் சாதிக்க முடியுமா?" என்று நம்ம ஊர்க் 'குடு குடு' கிழவர்கள் கேள்வி கேட்பார்களேயானால் பதிலளிப்பது நமக்குச் சாத்தியமே இல்லைதான்!
ஹி... ஹி... ஹி!!!
==========================================================================