அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 11 ஏப்ரல், 2022

இந்தித் திணிப்பை மட்டுமல்ல இந்தியையே எதிர்ப்போம்!!!

"இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தித் திணிப்பிற்கு மட்டுமே நாங்கள் எதிரானவர்கள்" -இது இன்று 'உதயநிதி ஸ்டாலின்' அவர்கள் ஆற்றிய உரையின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். 

இதன் எதிரொலியே இந்தப் பதிவு என்பது அவசியம் அறியத்தக்கது 

சென்னை தென்மேற்கு மாவட்டத் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது.

இதில்  தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, "இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தித் திணிப்பிற்கு மட்டுமே நாங்கள் எதிரானவர்கள்" என்று பேசியிருக்கிறார்https://www.maalaimalar.com/amp/news/topnews/2022/04/10130111/3661064/Tamil-News-Udhayanidhi-Stalin-says-We-are-not-against.vpf   -11.04.2022பிற்பகல்.

அவ்வப்போது இப்படிப் பேசுவது தி.மு.க.வினரின் வழக்கமாக உள்ளது.

"ஒரே நாடு; ஒரே மொழி..." என்று பேசிக்கொண்டு, படிப்படியாக அனைத்து மாநில மொழிகளையும் அழித்துவிட்டு[வடமாநில மொழிகள் கணிசமான அளவில் அழிக்கப்பட்டுள்ளன], இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல, கல்வி மொழியாகவும், பேச்சு வழக்கு மொழியாகவும் ஆக்கும் திட்டத்துடன்தான் அமித்ஷா உட்பட வடநாட்டு அரசியல்வாதிகள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள். தனிப் பெரும்பான்மை பலத்துடன் அவர்கள் ஆட்சி நடத்துவதும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும்கூட இந்நிலை மாறப்போவதில்லை என்பதும் முக்கியக் காரணங்கள் ஆகும்.

"நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்" என்றிப்படி 'வழவழா கொழகொழா' என்று பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் பாட்டுக்குத் திணிப்பு வேலையைச் செவ்வனே செய்து முடிப்பார்கள் என்பதில் சந்தேகத்திற்குக் கொஞ்சமும் இடமில்லை.

இது விரும்பத்தக்கதல்ல.

'இந்தியால் நம் தமிழ் மொழி காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிடும்' என்பது உறுதியாகத் தெரியும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் நாம் முன்வைக்கும் வேண்டுகோள்.....

"இந்தியை எதிர்க்கிறோம்" என்று முழங்குவதில் தவறே இல்லை என்பதை உணருங்கள்.

இந்தி குறித்து இனி பேசினால், "இந்தித் திணிப்பை மட்டுமல்ல, இந்தியையும் எதிர்க்கிறோம்" என்று பேசுங்கள். அது இயலாது என்றால், இது குறித்து எந்தவொரு சூழ்நிலையிலும் பேசாமல் இருப்பதே நல்லது.

நன்றி.

==========================================================================