ஆனால், இந்நாள்வரை, குற்றங்கள் அதிகரிப்பதாகவே ஊடவியலாளரும், சமூக நல ஆர்வலர்களும், மேடைச் சொற்பொழிவாளர்களும், எழுத்தாளர்களும் பரப்புரை செய்திருக்கிறார்கள்; செய்துகொண்டிருக்கிறார்கள்.
மேற்கண்ட, மருத்துவர்கள் தரும் விளக்க அறிக்கை நம்மை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.
அறிக்கை:
#பாலுறவுச் செயல்பாடுகளின் மீதான தாகம், ஒரு நீரூற்றைப் போல மனித மனங்களில் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது. அதன் விளைவாகப் பாலுறவு குறித்து நிறையவே தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஆர்வம்தான் பாலுணர்வைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்கவும், காணொலிகளைக் கண்டு களிக்கவும் தூண்டுகிறது.
பாலியல் புத்தகங்களைப் படிப்பவர்களோ, அது தொடர்பான காணொலிகளைக் கண்டு இன்புறுகிறவர்களோ உடனடியாக எதிர்பாலினத்தவர்களைத் தேடி அலைவதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவர்கள், புத்தகங்களிலும் காணொலிகளிலும் இடம்பெறும் பாலுறவு நிகழ்வுகளைத் தமக்கான அனுபவங்களாக ஆக்குகிறார்கள். விளைவு.....
தம்மை மறந்த நிலையில் 'சுய சுகம்' பெறுவதில் ஈடுபட்டுத் தாபம் தணியப்பெறுகிறார்கள்.
இதன் பின்னர் தம் அன்றாடக் கடமைகளில் இவர்களால் முழுக் கவனம் செலுத்த முடிகிறது. இதனால், பாலியல் குற்றங்களும் குறைந்துள்ளன#
குறிப்பு:
இப்படியும் ஆய்வுகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பகிர்வு.
மற்றபடி, மருத்துவக் குழிவினர் மேற்கொண்ட இந்த ஆய்வு முழுமையானது என்று உறுதிபடச் சொல்ல இயலாது; இதில் இவர்களின் அனுமானமும் கலந்துள்ளது என்றுகூடக் கூறலாம்.
காவல்துறையின் உதவியுடன், நாடெங்கும் பாலியல் குற்றம் இழைப்போரையும், ஆபாசத் தளப் பயன்பாட்டாளர்களையும் பேட்டி கண்டு, அவர்களை மனம் திறந்து பேச வைத்து, ஆய்வுகள் நிகழ்த்தினால் மட்டுமே 'முழு உண்மை' அறிதல் சாத்தியமாகும் என்பது என் கருத்து.
நன்றி.