தமிழ்நாடு முதல்வர் பேசியபோது அவருடைய பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரங்கத்திலிருந்த பாஜகவினர் எழுப்பிய முழக்கம் 'பாரத் மாதா கி ஜே’
முதல்வரை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டதை, தமிழை ஒரு பொருட்டாக மதிக்காத 'இந்தி'யர்களான 'பாஜக' பிரமுகர்கள் கண்டித்ததாகத் தெரியவில்லை. கண்டித்து முழக்கமிட்டவர்களை உடனுக்குடன் அடக்கி வைத்திருந்தால் திமுக தொண்டர்கள் எதிர் முழக்கம் செய்திருக்கமாட்டார்கள்.
தலைவர்களை அவமதிக்கும் அநாகரிகம் அரங்கேறியிருக்காது.
இந்நிலையில், 'ஜே' போட்ட 'பாஜக' தொண்டர்களுக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது ஒன்று உண்டு.
உங்களின் தலைவர்கள் எப்படியோ, தொண்டர்களான உங்களுக்குத் தாய்மொழி[தமிழ்]ப் பற்று உண்டு என்று நம்புகிறோம். ஆகவே.....
இனி, எந்தவொரு சூழலிலும், இங்கே பாரத மாதாவை வாழ்த்த விரும்புவீர்களேயானால், "பாரத அன்னை வாழ்க" என்று முழக்கமிடுங்கள்; "பாரத் மாதாகி ஜே" இனி வேண்டாம்.
இந்தியர்களாக வாழ்ந்திட விரும்பும் நீங்கள் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும், உங்களின் தாய்மொழி தமிழ் என்பதையும் மறவாதீர்! மறந்தால்.....
இந்த மண் உங்களை ஒருபோதும் மன்னிக்காது!
==================================================================
***பதிவை எழுதிமுடித்து, இணைப்பதற்குப் பொருத்தமான படமொன்றை இணையத்தில் தேடியபோதுதான் அண்ணாமலை அவர்களின் தமிழில் முழங்கச் சொல்லும் படம் தட்டுப்பட்டது. அதை மிக்க மகிழ்ச்சியுடன் தளத்தின் தலைப்பில் சேர்த்துள்ளேன்.
* * * * *
***விழாவில், தமிழ்நாடு முதல்வர் ஆற்றிய உரையை உள்ளடக்கியது கீழே இடம்பெற்றுள்ள காணொலி: