அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 5 மே, 2022

அந்திமக்காலப் புலம்பல்!!!


உடம்பில் தெம்பும், அனுபவிக்கத் தேவையான ஆயுளும் உள்ளவரை மரணத்தை நாம் பொருட்படுத்துவதில்லை.

ஆனாலும் அது நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறது.

நாம் போகும் இடமெல்லாம் நிழலாக உடன் வந்துகொண்டே இருக்கிறது.

செத்துப்போனவரையோ சாகக் கிடப்பவரையோ நாம் காண நேரும்போது, அது நம் தோள் வருடிக் கள்ளச் சிரிப்புடன் கை குலுக்கிப் போகிறது.

மகான்கள் என்ன, அவதாரங்கள் என்ன, ஞானிகள் என்ன மரணத்தை எண்ணி மனம் கலங்காதார் எவருமில்லை. கலங்குதல் கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம்.

இவர்கள் மட்டுமல்ல, வாழ்ந்து மறைந்த மேதைகள், அறிவியல் அறிஞர்கள், சமூகச் சீர்திருத்தச் செம்மல்கள், பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், தியாகிகள், நாத்திகர்கள் என்று மரணத்தின் கோரப் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்தவர் எவரும் இல்லை.

எவரேனும் இருந்துகொண்டிருப்பினும், நம்மைத் தேடி வந்து மரண பயத்திலிருந்து விடுபடுவதற்கு 'வழி' காட்டியவரும் இல்லை.

எனினும்.....

நம்மினும் மேம்பட்டவர்களாக வாழ்ந்த அவர்கள் பிணங்களாக வீழ்ந்து, புழுத்து நாறி, மண்ணோடு மண்ணாகிப்போன  அதே மரணப் 'பெருங்குழி'யில்தான் நாமும் விழப்போகிறோம் என்பதை எண்ணும்போது, முற்ற முழுக்க மரண பயத்திலிருந்து விடுபடுவது இயலாது எனினும், ஓரளவுக்கேனும் அது சாத்தியப்படக்கூடும் என்பது நம்மைப் போன்ற சாமானியரின் நம்பிக்கை!
==========================================================================