வெள்ளி, 17 ஜூன், 2022

கடவுளும் ஒரு காட்டுமிராண்டியே!!!


டவுள் கருணை வடிவானவன் என்கிறார்கள்.

அவனால் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் உயிர்கள் அனைத்தும் பிற உயிர்களை வதை செய்து கொன்று தின்றுதான்  வாழ்கின்றன[புல் பூண்டுகள் அணுக்களால் ஆனவை. அவை உணவாக்கப்படும்போது, அணுக்கள் கொல்லப்படுகின்றன. அவை வலியை உணர்வதும் உணராததும் தனி ஆய்வுக்கு உரியது].

மனிதனுக்கு ஆறாவது அறிவைக்[சிந்திக்கும் அறிவு] கொடுத்தவனும் அந்தக் கருணைக் கடவுள்தான் என்கிறார்கள்.

ஐந்தறிவு விலங்காக வாழ்ந்தவரை, பிற உயிர்களை உணவாக்கிக்கொள்வது, பிற மனிதர்களுடன் உணவுக்காகவும் உடைமைக்காகவும் மோதல்களில் ஈடுபடுவது என்று மிகச் சில குற்றச் செயல்களில் மட்டும் ஈடுபட்ட இவன்.....

ஆறாவது அறிவு வாய்த்த பிறகு, தன் இனத்தவருக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் இழிசெயல்களையும் அழிவு வேலைகளையும்[நற்செயல்கள் குறைவு] செய்வதோடு, பிற உயிரினங்களைத் தனக்குச் சேவகம்[குதிரை, மாடு, ஒட்டகம் முதலானவை] செய்ய வைப்பது, காடுகளை அழித்து அங்கு வாழ்வனவற்றைப் பூண்டோடு அழிப்பது, ஆய்வுக்கூடங்களின் வைத்து[எலி, குரங்கு போன்றவை]ச் சித்ரவதை செய்வது என்றிப்படி ஏராளமான அட்டூழியங்களைச் செய்துகொண்டிருக்கிறான்.

இப்படி, உயிர்கள் அனைத்தையும் கொடூரப் புத்தி கொண்டவையாகவும், மனிதனை அரக்கக் குணம் கொண்டவனாகவும் படைத்த 'அவனை'க் கருணை வடிவானவன் என்று நம்புகிறார்கள் மனிதருள் புத்தி கெட்ட மிகப் பெரும்பாலோர். 

இவனுக்குக் கோயில்கள் எழுப்பி, விழாக்கள் எடுத்துக் கூத்தாடிக் கும்மாளமிடும் இவர்கள் காட்டுமிராண்டிகள்.

உண்மையில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் இவர்களைப் படைத்த அவனே ஒரு காட்டுமிராண்டிதான்!

======================================================================================