"நான் இதற்கு முன்பு ஒரு பத்திரிகையின் அட்டையில் மார்பில் முடியுடன் ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை. ஆனால், அப்படியான ஒரு பெண்ணாக நான் இருக்கிறேன்[நடு நெஞ்சில் முடியுடன்]" என்று சொல்பவர் எஸ்தர் கலிக்ஸ்டே-பியா[Esther Calixte-Bea] என்னும் பதின் பருவப் பெண்[படத்தில் காட்சி தருபவர்].
பல ஆண்டுகளாக, இவர் இந்த முடியை அகற்றுவதற்காகப் பணம் செலவழித்திருக்கிறார்; இம்மாதிரியான கோலத்தில், நீச்சல் குளம் போவது, மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவது போன்ற செயல்களைத் தவிர்த்திருக்கிறார்
பதினொரு வயதிலேயே உடம்பெங்கும் அதிக முடி வளரத் தொடங்கியதாகவும், அவற்றை நீக்கும் வேலையைத் தொடங்கியதாகவும் கூறியிருக்கிறார்.
இவர் ஹைட்டியன் மற்றும் ஐவோரியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்; மாண்ட்ரீலின் தென் கரையில் உள்ள லாங்குவில் என்ற இடத்தில் பிறந்தவர்; அண்மையில் மாண்ட்ரீல் நகரத்தில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் ஓவியம் மற்றும் ஓவியம் வரைவதில் பட்டம் பெற்றார்; நிறுவனம் ஒன்றில் பணியாற்றவும் செய்கிறார்.
முடியை அகற்றும் வேலையைச் செய்து செய்து மனம் சலித்த இவர், அச்செயலை முற்றிலுமாய் நிறுத்திவிட்டு, மற்ற இடங்களில் மட்டுமல்லாமல், நடு நெஞ்சில் வளரும் முடியை அகற்றுவதையும் தவிர்த்து, இயல்பான கோலத்தில்[ரோமங்களுடன்] இருப்பதையும் வெளியாருடன் பழகுவதையும் வழக்கமாக்கிக்கொண்டாராம்.
பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான மனதிடத்தை[Empowering] இது அளித்திருப்பதாகவும் இவர் நம்புகிறார்.
கொஞ்சம் நாட்களுக்கு முன்பு, வளர்ந்த மீசையுடன் வலம்வரும் திருப்பூர்ப் பெண் குறித்த செய்தி நம் மனதை வெகுவாக வருத்தியது. இப்போது எஸ்தர்!
மரபணுக்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் இம்மாதிரி எசகுபிசகான முடி வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
படைப்புக் கடவுளான 'பிரமன்' சோமபானம்[தேவர்கள் அருந்தும் மதுபானம்] தந்த மிதமிஞ்சிய போதையில் தப்பும் தவறுமாய்ப் படைப்புத் தொழிலைச் செய்கிறானோ என்று சந்தேகம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை! ஹி...ஹி...ஹி!!!
===============================================================================