மாற்றுக் கருத்தும் உளதோ?!
'சத்' கருத்துகளும் நம் சந்தேகங்களும்!
சத்: "பக்தி என்பது கடவுள் பற்றி அல்ல; உங்கள் உணர்வுகளை இனிப்பாக மாற்றுவது"
நாம்: 'பக்தி என்பது கடவுள் பற்றி அல்ல'ன்னு என்ன அர்த்தத்தில் சொல்றீங்க?
கடவுள் மீது பக்தி வேண்டாம் என்றா, உணர்வுகளை இனிப்பாக மாற்றுகிற பக்திக்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை என்றா? எவருக்கு புரியாமல் பேசுவதுதான் 'சத்குரு'வுக்கான தகுதியா? உலகம் புகழும் ஞானி ஆவதற்கான தந்திரமா?!
சத்; "கடவுள் யாரிடமும் எதையும் கேட்பதில்லை"
நாம்: கடவுள் பத்து நாள் முன்பு என்னிடம் பத்து ரூபாய் கடன் கேட்டார். ஹி... ஹி... ஹி!!! பதிவுலக அன்பர்களே, உங்களிடம் எதுவும் கேட்டதில்லையா?
சத்: "பராமரிப்பது உங்கள் கடன்"
நாம்: பராமரிக்கத் தெரியாத 'அவன்' எதற்காகப் படைச்சான்?
சத்: "கடவுள் ஒரு மேலாளராக இல்லை"
நாம்: மேலாளர் நீங்க இருக்கும்போது அவர் எதுக்குங்க? ஹி... ஹி... ஹி!!!
சத்: "நீங்கள் கடவுளைப் போல் ஆவதே என் விருப்பம்"
நாம்: கடவுளென்ன, உங்களைப் போல் 'கடவுளுக்குக் குரு' ஆவதே எங்கள் விருப்பம். ஆசை நிறைவேறுமா?
சத்: "அவர் உங்களுக்குள்ளிருந்து இயங்கிக்கொண்டிருப்பது..."
நாம்: 'நாங்கள் கடவுள் ஆவதே உங்கள் விருப்பம்'னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு அவர் எங்களுக்குள் இயங்கணும்? கடவுளுக்குள் கடவுளா?
சத்: "வாழ்க்கை நீங்கள் நினைப்பது போல் இல்லாமல் கடவுளின் விருப்பத்துக்கு நடந்தால்..."
நாம்: 'கடவுள் படைப்பாளி மட்டுமே; மேலாளர் அல்ல'ன்னு மேலே சொல்லியிருக்கீங்க. இங்கே 'கடவுளின் விருப்பத்துக்கு'ன்னு சொல்லுறீங்க. ஜக்கி அவர்களே, கடவுள், தத்துவம்னு எதையெதையோ பேசிக் குழப்பி எங்களைப் பித்தர்கள் ஆக்குவதுதான் நீங்கள் 'சத்குரு' வேடம் தரித்ததன் உள்நோக்கமா?
உங்களுடைய தத்துவம் பித்துக்குளித்தனமா இருக்கு. ஆனா, ஆடை விசயத்தில் அசத்துறீங்க! அனுபவியுங்க மிஸ்டர் ஜகதீஸ் வாசுதேவ்!!
===========================================================================