பக்கங்கள்

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

கொக்கோகக் கலைஞர்கள்!!!


திருமணமான புதிதிலோ, கொஞ்சம் காலம் கழித்தோ மணமான ஒரு பெண் தன் கள்ளக் காதலனுடன் ஓடிப்போவது என்பது நடைமுறை வாழ்க்கையின் ஓர் அம்சமாக ஆகிவிட்டது. 

பிள்ளை ஏதும் பெறாத நிலையில் ஓடிப்போவதால் தாலி கட்டிய கணவன் மட்டுமே பாதிக்கப்படுகிறான். 

ஒன்றோ சிலவோ என்று பிள்ளைகளைப் பெற்று, அவர்களைக் கண்ணும் கருத்துமாய்க் காக்க வேண்டிய நிலையில் ஓடிப்போவது, கணவனின் தன்மானத்தை மட்டுமல்லாமல் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது.

காமக் களியாட்டத்திற்கு இடையூறு எனக் கருதி, ஒரு பெண் கள்ளக் காமுகனின் உதவியுடன் கணவனைக் கொல்வதும், பிள்ளைகளைச் சாகடிப்பதும்கூட அடிக்கடி இடம்பெறும் அவல நிகழ்வுகளாக உள்ளன.

"கணவனுடனான உறவை அறவே துறந்து, பிள்ளைகள் மீதான பாசத்தை முற்றிலுமாய்த் துடைத்தெறிந்து, திருட்டுச் சுகம் தருபவனிடம் 'சரணாகதி' அடையும் அளவுக்கு 'அவன்' தரும் இன்பம் அத்தனை மேலானதா?" என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கேட்டு ஆச்சரியத்தில் திளைப்பதுண்டு.

உடலுறவு விசயத்தில் 'சாகசம்'  புரியும் அந்த 'அவன்'களின் அசாத்தியத் 'திறமை'யை எண்ணி மலைத்துப்போவதும் உண்டு.

"வாத்சாயனரில் இல்லாத புதிய புதிய புணர்ச்சி முறைகளைக் கையாள்கிறார்களோ? 'கொக்கோகக் கலை'யைக் கரைத்துக் குடித்திருப்பார்களோ?" என்றெல்லாமும் பிரமித்துக் கிடந்ததுண்டு.

ஒரு கட்டத்தில்.....

அவர்களில் தண்டனை பெற்றவர்களுக்கான பட்டியல் தயாரித்து, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றுச் சந்தித்து, கலந்துரையாடி, 'அது' விசயத்தில் அவர்கள் கையாளும் உத்திகளையும் உபாயங்களையும் சல்லாப முறைகளையும் கேட்டறிந்து நூலாக்கினால், அது, 'அது' விசயத்தில் 'ஏனோதானோ' என்றிருக்கும் கணவர்களுக்கும், புதிதாகத் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் எனலாம்.

கூடவே, பெண்ணொருத்தி கள்ள உறவுக்காரனுடன் ஓடிப்போவது அல்லது, அவனுடன் இணைந்து கொலைபாதகச் செயல்களில் ஈடுபடுவது போன்ற தகாத செயல்கள் பெருமளவில் தவிர்க்கப்படும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இப்படி எண்ணுவது ஏற்புடைய செயலாகுமா? நடைமுறை சாத்தியமா?

சிந்தியுங்களேன்!

===========================================================================