#கேரளாவில் கோட்டயம் மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் மரியம்மா. மறைந்த பாதிரியார் பி.ஓ.வர்கீசின் மனைவியான இவர், வயது மூப்பு காரணமாகக் கடந்த வாரம் காலமானார். அவருக்குக் கிறிஸ்துவ முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இந்த இறுதிச்சடங்கில், மரியம்மாவின் 9 மகன், மகள்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் அனைவரும் மரியம்மாவின் உடலுக்கு அருகே அமர்ந்து சிரித்த முகத்துடன் 'குரூப் போட்டோ' எடுத்துக்கொண்டனர்.
இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், பலரின் விமர்சனத்திற்கும் உள்ளானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர், வாழும்போது சிறப்பான வாழ்க்கை வாழ்ந்த மரியம்மாளின் ஆன்மா சொர்க்கத்துக்குச் சென்றது என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். அதன் பொருட்டே சிரித்த முகத்துடன் அவரை வழியனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.# இது செய்தி[24.08.2022].
* * * * *
மரியம்மா சொர்க்கத்துக்குப் போனதாக நம்பி இவர்கள் சிரிக்கிறார்கள்.
சிரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்துடன், மரியம்மா பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து, ஈ, எறும்பு நெருங்காமல் வளர்த்து ஆளாக்கினாரே அந்த மகன்களும் மகள்களும்கூடச் சேர்ந்து சிரிப்பது எப்படிச் சாத்தியமானது?!
மரியம்மா சொர்க்கம் சேர்வார் என்பதில் அத்தனை நம்பிக்கையா இவர்களுக்கு? அதை ஆதாரங்களுடன் நிரூபித்தால், அப்புறம் எவனும் தப்பே செய்யமாட்டான். இந்த உலகமே 'சொர்க்கம்' ஆக மாறிவிடும். நிரூபிப்பார்களா?[
மரியம்மா போன பிறகு இவர்கள் சிரிக்கிறார்கள். தன்னுடைய உயிர் பிரிகிற அந்தச் சில கணங்களில் உற்றார் உறவினர் என்று அத்தனை பேரையும் பிரிய இருப்பதை நினைத்து நிச்சயம் மனம் கலங்கிக் கண்ணீர் உகுத்திருப்பார் மரியம்மா. அப்போதுகூட அவரைப் பார்த்து இவர்கள் சிரித்திருப்பார்களோ?
மரியம்மாவுக்குத் தான் சொர்க்கம் போவது தெரிந்திருக்காது. இவர்கள், அவர் சுயநினைவோடு இருக்கும்போதே, "நீங்கள் சொர்க்கம் போகிறீர்கள்" என்று சொல்லிச் சிரித்திருந்தால், அவரும் இவர்களுடன் சேர்ந்து சிரித்திருக்கக்கூடும். செய்தார்களா?
மரியம்மா சொர்க்கம் போனாலும், நிரந்தரமாய்க் கர்த்தரின் திருவடிகளிலேயே தங்கியிருந்தாலும் மகிழ்ச்சியே. ஆனால்.....
பிறந்தவர் இறப்பது இயற்கைதான் என்றாலும், முன்னுதாரணமாய் வாழ்ந்துகாட்டிய மதிக்கத்தக்க இந்த மூதாட்டியை இனிக் காணவே முடியாது என்று எண்ணும்போது அழுகை அல்லவா பீறிட வேண்டும். 'சொர்க்கம் உண்டு' என்னும் நம்பிக்கையை மட்டும் உறுதுணையாகக்கொண்டு ஒன்றுகூடிச் சிரிக்கிறார்களே, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா?
இன்று மரியம்மா. நாளை இவர்களால் வெறுக்கப்படுகிற ஒரு 'மேரியம்மா' இறந்துபோனால்.....
"மேரியம்மா நரகத்துக்குச் சென்றுவிட்டார்" என்று உள்ளம் பூரித்துச் சிரிப்பார்களோ?!
* * * * *
சோகம் சூழ்ந்த நேரத்தில் சிரித்து மகிழும் மரியம்மாவின் சொந்தபந்தங்கள்: