அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 15 செப்டம்பர், 2022

'இது' விசயத்தில் இங்கிலாந்துக்காரர்கள் தேவலாம்!!!

ங்கிலாந்து மகாராணியாரின் சவப்பெட்டி, ஸ்காட்லாந்திலுள்ள தேவாலயம் ஒன்றிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது, வானிலிருந்து வந்த ஓர் ஒளிக்கற்றை மிகச் சரியாக மகாராணியாரின் சவப்பெட்டி மீது விழுந்ததாம். இந்த நிகழ்வைக் கண்ணெதிரே கண்டுகொண்டிருந்த மக்கள், இதைத் 'தெய்வீகச் செயல்' என்று வியந்து நெகிழ்ந்தார்களாம்.


இது 15.09.2022 செய்தி https://news.lankasri.com/article/a-beam-of-light-fell-from-the-sky-on-the-coffin-1663147575 . ஏற்கனவே, பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவான அதிசயம் ராஜ குடும்ப ரசிகர்களை நெகிழச் செய்தது என்கிறார்கள்.

 மகாராணியாரின் சவப்பெட்டியின்மீது வானிலிருந்து விழுந்த ஒளிக்கதிர்: மக்களை நெகிழவைத்த ஒரு இயற்கை அதிசயம் | A Beam Of Light Fell From The Sky On The Coffin

இரட்டை வானவில் காட்சியை இயற்கைச் சம்பவம் என்று சொல்வது சரியாக இருக்கலாம், இயற்கையில் இது போன்றவற்றிற்கு அறிவியல் ரீதியாக ஏதேனும் காரணம் இருக்கும் என்பதால்.

சவப்பெட்டி மீது விழுந்த ஒளிக்கற்றையைத் தெய்வச் செயல் என்பதுதான் உள்மனதை உறுத்துகிறது.

சர்க்கஸ்காரர்கள் புதிதாக ஓர் ஊருக்குச் சென்று, காட்சியைத் தொடங்குவதற்கு முன்னால், கூடாரத்துக்கும் வானத்துக்குமாக ஓர் ஒளிக்கற்றையை நிலைநிறுத்திச் சுழலச் செய்வார்கள். அதைப் போன்றதொரு தொழில்நுட்பத்தைக் கையாண்டு, பிரமாண்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் எங்கோ யாரோ பதுங்கியிருந்து இதைச் செய்திருக்கலாம்தானே?

இந்த 'ஒளிக்கற்றை' குறித்து இம்மாதிரியான கேள்விகளை இங்கிலாந்து வாழ் பகுத்தறிவாளர்கள் கேட்டிருக்கிறார்களா? அறிய  இயலவில்லை.

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால்.....

'கருணைக் கடவுளே ஒளிக்கற்றையாகக் காட்சிதந்து அருள்பாலித்தார்' என்பதோடு நில்லாமல், அதில் "கண்ணன் புன்னகை புரிவது கண்டேன்", "பரமசிவன் பார்வதி சமேதரராகக் காட்சியளித்தார்", "பிள்ளையாரைப் பார்த்தேன்", "சிரித்த முகத்துடன் லட்சுமி எனக்குக் கையசைத்துப் 'பை' சொன்னார்" என்றெல்லாம் ஆளாளுக்குக் கதை சொல்லிக் கண்ணீர் வடித்து கட்டாந்தரையில் நீட்டிப் படுத்துத் தரிசனம் செய்திருப்பார்கள்.

ஆனால், இங்கிலாந்துக்காரர்களோ, "ஒளிக்கற்றையில் கர்த்தரைத் தரிசித்தேன்" என்றுகூடச் சொல்லாமல், "இது தெய்வச் செயல்" என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். 

அவர்கள் தேவலாம்!

===========================================================================