ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

'ஹிஜாப்' எதிர்ப்பைச் சீர்குலைக்கும் 'ஹிஜாப்' பெண்கள்!!!

'ஈரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம்: 8 நாட்களில் 50 பேர் பலி; பெண்கள் மீதான வன்முறையும் அதிகரித்திருக்கிறது.'

ஈரான் போராட்டத்தில் ஒரு காட்சி

ஈரானின் 80 நகரங்களில் தொடர்ந்து நடைபெறும் இந்தப் போராட்டத்தின் நோக்கம், ஹிஜாப் கட்டாயப்படுத்தப்படுவதை எதிர்ப்பது மட்டுமல்ல, ஈரானியச் சட்டப்படி ஒரு தந்தை தன் வளர்ப்பு மகளை மணம் புரிவதையும் எதிர்ப்பதோடு.....

ஈரானியப் பெண், குடும்பத் தலைவரின் அனுமதியுடன் ஒருமுறை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், ஈரானிய ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது, ஆண்கள் எந்தவொரு தலையீடும் இல்லாமல், மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்துச் செய்வது ஆகியவற்றையும் எதிர்ப்பதாகும்.

13 ஆக உள்ள பெண்களின் திருமண வயதையும் ஆண்களின் திருமண வயதையும் உயர்த்துவது[ஆண்கள்15] ஆகியவையும் போராட்டத்துக்கான நோக்கங்கள் ஆகும்.

ஈரானியப் பெண் வெளிநாடு செல்வதற்குக் கணவரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதும் அவற்றுள் அடங்கும்.

ஈரானின் வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவி இறந்தால் அவரது சொத்து கணவனுக்கு மாற்றப்படும். ஆனால், ஒரு கணவர் இறந்தால், அவரது விதவை மனைவிக்கு 1/8 பங்கில் மட்டுமே உரிமை உண்டு. அவர்களின் மகனுக்கு மகளுடன் ஒப்பிடும்போது தந்தையின் சொத்தில் இரு மடங்கு பங்கு கிடைக்கும். இந்தச் சட்டமும் திருத்தப்படுதல் வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

ஆண்களின் விளையாட்டுகளைக் காண்பதற்கும், பெண்கள் பொது இடங்களில் நடனமாடுவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குதல் வேண்டும் என்றும் வேண்டுதல் வைத்துப் போராடுகிறார்கள் ஈரானியப் பெண்கள்.

இவர்களின் இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்தான் அந்தவொரு விரும்பத் தகாத நிகழ்வும் ஈரானில் அரங்கேறியுள்ளது.

அது.....

ஹிஜாப்புக்கு ஆதரவான போராட்டங்களும் தொடர்கின்றன என்பதுதான். ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கறுப்பு உடைகளை அணிந்து, தெஹ்ரான் வீதிகளில் முழக்கமிடுகிறார்களாம்!https://www.hindutamil.in/news/world/872696-50-killed-as-anti-hijab-protests-intensify-in-iran.html  -24 Sep, 2022 'பெண்ணுக்குப் பெண்ணே எதிரி' என்னும் வழக்கு மொழிக்கு ஈரான் பெண்கள் மட்டும் விதிவிலக்கா என்ன!!!

*****See how savagely the security forces attacked and pushed this woman so her head hits the curb in the city of Shiraz. Women are still resisting the crackdown and leading the fight.

ஈரானியப் பாதுகாப்பு அதிகாரிகள் எந்த அளவுக்குப் பெண்களை அவமதிக்கிறார்கள் என்பதைக் கீழ்க்காணும் முகவரியைக் 'கிளிக்' செய்து பாருங்கள்!

https://twitter.com/i/status/1573762455746101248