அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 26 செப்டம்பர், 2022

தர்ப்பணமும் திருந்தாத ஆறறிவு மனித மந்தையும்!!!

'பித்ருக்கள் இந்த உலகத்துக்கு வரும் மஹாளய அமாவாசை தினத்தில் அவர்களைத் திருப்திப்படுத்தும்விதமாகப் புண்ணியச் சடங்குகளைச் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து நமக்கும், நம்முடைய சந்ததியினருக்கும் பல்வேறு நன்மைகள் புரிவர் என்கிறது கருட புராணம். இந்த நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன?

பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.' https://tamil.webdunia.com/article/special-astro-predictions/specials-rich-in-mahalaya-amavasya-what-to-do-119020400022_1.html

* * * * *


எவ்வளவு பேர் வருகிறார்களாம்?

ஆயிரக்கணக்கிலா? பல்லாயிரக் கணக்கிலா? பல பல பல கோடி கோடி கோடிக் கணக்கிலா?

இதைப் பார்த்தவர் யார்? எவரெல்லாம்?

அதென்ன மகாளய அமாவாசையில் மட்டும்?

மற்றவையெல்லாம் ஆகாத நாட்களா?

இங்கு வரும் அவர்கள் எங்கே தங்கியிருப்பார்கள்? எப்போது திரும்பிச் செல்வார்கள்?

கருடப் புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறதாம்.

பல லட்சம் மைல்களை அவர்கள் எப்படிக் கடந்து வருவார்கள்?

பல்லக்குகளிலா, அலங்கரிக்கப்பட்ட பூந்தேர்களிலா? ஏவுகணைகளிலா?

மற்ற நாட்களில் எல்லாம் அந்த லோகத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்?

ஒருத்தருக்கு ஒருத்தர் சொறிந்துகொண்டு சுகபோகத்தில் மூழ்கிக் கிடப்பார்களா??

அதென்ன கருட புராணம்? அதன் இன்னொரு பெயர் புருடா புராணமா?

யாரோ சில/பல அயோக்கியர்கள் கட்டிவிட்ட கதையை நம்பி, லட்சக்கணக்கில் ஆற்றங்கரை மணல்களிலெல்லாம் இலை தழை, பூமாலை என்று எதை எதையெதையோ குவித்துக் குப்பை மேடாக்கும் இந்த மூடர்களைத் திருத்த நாதியே இல்லையா?

பூணூல் போட்ட பூசாரிகள் சொன்னபடியெல்லாம் புரியாத எதையெல்லாமோ முணுமுணுத்துவிட்டு, அவர்கள் கேட்கிற பணத்தைக் கொடுத்துப் புண்ணியம் சம்பாதித்ததாக நம்பும் இவர்களின் உள் மண்டையில் என்னதான் இருக்கிறது?

தர்ப்பணம் பண்ணுகிற பல்லாயிரக் கணக்கானவர்களில் சிந்திக்கும் அறிவு யாருக்குமே இல்லையா?

இவர்கள் முட்டாள்கள் என்பது மட்டுமல்ல, தங்களின் வாரிசுகளையும் முட்டாள்கள் ஆக்குகிறார்களே, இது நியாயமா?

"இவர்கள் படைக்கிற பதார்த்தங்களைப் பித்ருலோகத்திலிருந்து வருகிற மூதாதையர் உண்ணுகிறார்களா? மற்ற நாட்களில் அவர்கள் எதைத் தின்று அல்லது உண்டு உயிர் வாழ்கிறார்கள்?" என்றிப்படி இவர்கள் ஒரே ஒரு முறையேனும் கேள்விகள் கேட்டுப் பதில் தேடியதுண்டா?

வாழ்நாளெல்லாம் முட்டாள்களாகவே இருந்துவிட நினைக்கிறார்களா?

திருந்தவே மாட்டார்களா?