அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

'பிரேசில்'காரிகளின் துணிவைப் பிற நாடுகளின் பெண்கள் பெறுவது எப்போது?!

 

ரே நாளில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையர் வேறு வேறானவர்கள் என்றால் நம்ப முடிகிறதா?

நம்புங்கள்.

'பிரேசில்' நாட்டைச் சேர்ந்த 19 வயதான பெண்ணுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.


இரட்டை மகிழ்ச்சியில் மிதந்த அவளுக்கு ஓர் அதிர்ச்சியும் காத்திருந்தது. அது.....


இரண்டு குழந்தைகளின் மரபணுக்களும்[DNA] வெவ்வேறாக இருந்தன என்பதுதான். அதாவது, இரு குழந்தைகளும் ஒரே ஆணுக்குப் பிறந்தவை அல்ல; இரு வேறு ஆண்களுக்குப் பிறந்தவை. வேறு வேறான இரண்டு மரபணுக்களும் அந்த இருவருக்கும் சொந்தமானவை என்பதுதான். [https://tamil.oneindia.com/news/international/brazilian-twins-shared-two-different-fathers-as-doctors-say-medical-miracle/articlecontent-pf757150-474674.html  -8 Sept 2022, 1:59 pm]


அண்மையில் நடந்த இந்த அதிசய நிகழ்வு தானாக நிகழ்ந்தது.


இதே மாதிரியான ஒரு நிகழ்வு இரு ஆண்களின் திட்டமிடலால் 2019இல் நிகழ்ந்துள்ளது.


1919ஆம் ஆண்டில், சைமன் மற்றும் கிரெமி பெர்னி-எட்வர்ட்ஸ் என்னும் இருவரும், தங்களின் விந்தை எடுத்துத் தனித்தனிப் பெண் கருவோடு சேர்த்துக் கருத்தரிக்க செய்தனர். அவ்வாறு, செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருத்தரித்த கரு முட்டைகள் இரண்டையும் ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் ஒரே நேரத்தில் வைத்து வளரச் செய்து தத்தமக்குரிய குழந்தைகளைப் பெற்றெடுத்துக்[வாடகைத் தாய் மூலம்], கொஞ்சி மகிழ்ந்தார்களாம்[ https://www.bbc.com/tamil/global-4  -17 பிப்ரவரி 2019].


இரண்டு தந்தையர், ஒரு தாய், இரட்டை குழந்தைகள்: எப்படி சாத்தியமானது?

வாடகை தாய் மெக் ஸ்டோன் மற்றும் அவரது குழந்தைகளோடு சைமன் மற்றும் கிரெமி



வற்றில் பிரேசில்காரி இரு மகவுகளைப் பெற்றெடுத்தது மிக மிக மிக அரிதான நிகழ்வு என்கிறார்கள் மருத்துவர்கள். 


அவர்கள் இது பற்றி அந்தப் பெண்ணிடம்[பிரேசில்காரி] விசாரித்தபோது, அவள் ஓரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டதைத் தெளிவுபடக் கூறினாளாம்!.


இவள் மகாப் பெரிய துணிச்சல்காரி என்பதை எண்ணிப் பிரமிக்கிறோம்! வாழ்த்துகிறோம்!!!

=========================================================================