ஒருவரை மட்டுமே மணம் புரிந்து, அளவோடு உடலுறவு இன்பம் அனுபவிப்பது 'ஒரு தார மணம்'. இது கட்டுப்படுத்தப்பட்டது; ஆங்கிலத்தில் committed relationship எனப்படும்.
மனதை ஓரளவுக்கு மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தவர்கள், பலரை மணந்து பல்வகை உடலுறவுச் சுகங்களையும் துய்ப்பது 'பலதார மணம்'[polygamy]. ஆகும்.
காம உணர்ச்சியின் உச்சம் தொட்டுக் கட்டுப்பாடு ஏதுமின்றி விரும்பியவாறெல்லாம் புணர்ந்து திரிவதற்குப் பெயர் 'விருப்ப[கட்டற்ற] உடலுறவு' அதாவது, Open relationship.இந்த Open relationship என்பதைத்தான் bbc 'திறந்த உறவு முறை'[எதையும்
திறக்காத உறவு(உடலுறவு] முறை உண்டோ?!] என்று மொழியாக்கம் செய்திருக்கிறது.
'விருப்ப[திறந்த] உறவு முறை' மீதான ஆர்வம் பெரும்பாலும் இளம் தலை
முறையிடம் அதிகரித்து வருவதாக 'வின்ஸ்டன்' என்னும் ஆய்வறிஞர் கூறி
யிருக்கிறார்.
பாலியல் மற்றும் உறவு இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க,கிரியேட்டிவ் ரிலேட்டிங் சைக்காலஜி சைக்கோதெரபியின் ஆலோசக
ரான 'சாரா லெவின்சன்' என்பவர், கடந்த பத்தாண்டுகளில் விருப்ப உறவு
முறை மீதான ஆர்வம் அதிகரித்து வருவதைக் கணித்துள்ளாராம்.
எல்லா வகை மக்களும் விருப்ப உறவுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
சில ஆண்டுகளாக, தமது அமர்வுகளில் இவ்வகை உறவுகளில் பங்கேற்பவர்
களிடையே பன்முகத்தன்மையைக் காண்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பயனர்களிடம் இந்த உறவு முறையில் உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, அந்தக் கேள்விக்குப் பதிலளித்தவர்களில், 31 சதவிகிதம் பேர் "ஆம்" என்று தெரிவித்துள்ளனர். இந்த விகிதம் 2021இல் 29 சதவிகிதமாகவும், 2020இல் 26 சதவிகிதமாகவும் இருந்தது என்கிறார்.
விருப்ப உறவுகளில் பங்கேற்கும் பலர் 25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்
களாக இருப்பதைத் தன்னுடைய அனுபவத்தில் அவர் கண்டறிந்துள்ளார்.
மேலும், அவர்களில் பலர் வினோதமான, இருபால் மற்றும் பான்செக்சுவல்
[எ] பாலினத்தைப் பொருட்படுத்தாதவர்களாகத் தங்களை அடையாளப்
படுத்துகின்றனர். இருப்பினும், 19 வயது இளையவர்கள் முதல் 70 வயது
[இதற்கு மேலும் இருக்கலாம்] முதியவர்கள்வரை விருப்ப உறவுகளில்
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுடன் அவர் பணியாற்றி இருக்கிறாராம்.
விருப்ப உறவு முறை உட்படப் பலதார மண உறவில் கவனம் செலுத்தும்
தளங்கள் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது என்கிறார்கள்.
'ஹின்ச் டேட்டிங்' செயலியின் பத்தில் ஒரு பயனர், விருப்ப[திறந்த] உறவு முறையில்
ஈடுபட்டுள்ள நிலையில், அதன் 2022ஆம் ஆண்டுத் தரவுகள் ஐந்தில் ஒரு பயனர்
இந்த உறவு முறையை விரும்புவதாகக் கூறுகிறது.
இவை தவிர.....
சமீபகாலமாகப் பிரிட்டனைச் சேர்ந்த 1 மில்லியனுக்கும் அதிகமானOkCupid [OkCupid is the only dating app that matches you on what matters to you. You deserve to find who you’re looking for. Meet them today!] பயனர்கள் இது விசயத்தில் கட்டுப்பாடில்லாமல் கொட்டம் அடிக்கிறார்களாம்.
உலகம் அழியும்... அழியும் என்கிறார்கள். அது அழிகிறதோ இல்லையோ, உடலுறவு விசயத்தில், "இது போதும்" என்னும் மனம் இல்லாமல், விதம் விதமாய்ப் புதிது புதிதாய்ப் புணர்ச்சி இன்பம் துய்ப்பதே பிறந்ததன் பயன் என்றெண்ணும் மனிதர்களின் விபரீத புத்தி, வெகு விரைவில் இந்த இனத்தைப் பூண்டோடு அழித்தொழிக்கும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமே இல்லை!
===========================================================================
எச்சரிக்கை!
மூலத்தின் அளவைச் சுருக்குவதும், கூடுதல் விளக்கம் கொடுப்பதும், விமர்சனம் செய்வதும் என் வழக்கம் என்பதால், மூலப் பதிவை உள்ளது உள்ளவாறே வாசித்தறிய விரும்புவோர் https://www.bbc.com/tamil/global-63193144 [-10 அக்டோபர் 2022] முகவரிக்குச் செல்லலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக