எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 11 நவம்பர், 2022

ஆசிரியர்களைப் பெரிதும் மதிக்கும் நாடுகள்!


*அமெரிக்காவில் மிக உயர்வாகக் கருதப்படுபவர்கள் விஞ்ஞானிகளும் ஆசிரியர்களும்.

*ஃபிரான்ஸின் நீதிமன்றங்களில் நாற்காலிகளில் அமரும் உரிமை ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

*ஜப்பானில், ஆசிரியரைக் கைது செய்வதற்கு அரசிடம் அனுமதி பெறுதல் வேண்டும்.

*கொரியாவில் அடையாள அட்டை வைத்திருக்கும் ஆசிரியருக்கு அந்நாட்டு அமைச்சருக்கு வழங்கப்படும் உரிமைகளும் மரியாதைகளும் வழங்கப்படும்.

*ஆமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் முதன்மை[?] ஆசிரியர்கள் அதிக அளவில் ஊதியம் பெறுகிறார்கள்.

மேற்கண்ட நாடுகளில் இந்த அளவுக்கு ஆசிரியர்கள் மதிக்கப்படுவதற்கு அவர்கள் சமூகத்தை 'வடிவமைப்பவர்கள்' என்பதால்தானாம்!

ஆசிரியர்களை அவமதித்தால் சமூகத்தில் திருடர்கள், ஊழல் செய்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டவர்கள் நம்புகிறார்களாம்.

                                             *   *   *   *   *

***இந்தச் செய்தித் தொகுப்பு, மாணவர்களால் 'போர் ஆசிரியர்' என்று செல்லமாக[ஹி...ஹி...ஹி!!!] அழைக்கப்பட்ட 'பேராசிரியர்' ஆன அடியேனின்  'WhatsApp'க்கு ஆசிரிய நண்பர் ஒருவர் அனுப்பியது.   

=========================================================================