தொற்றுநோயால் ஒருவருக்கு ஆணுறுப்பு அறுந்து விழுந்தது என்றால் நம்ப முடிகிறதா?
'மால்கம் மெக்டொனால்ட்'[47] என்பவருக்கு அந்தக் கொடூரம் நிகழ்ந்தது என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். காரணம், இது ஆதாரபூர்வமான செய்தி [https://www.mirror.co.uk/news/uk-news/man-who-penis-attached-arm-26860407].
நம் அனுதாபத்துக்குரிய அந்த மனிதர் கீழ்க்காண்பவர்தான். கழிப்பறையில் அவர் அதை இழந்தார்.
(படம்: Louis Wood News Group Newspaper Ltd)
ஆனாலும், 'அது' விசயத்தில் அவருக்கு 'மறுவாழ்வு' அளிக்கப்பட்டது. எப்படி?
விஞ்ஞானிகளால் புதிதாக உருவாக்கப்பட்டதொரு 'மாற்று' ஆணுறுப்பு, அவரின் கையில் இணைக்கப்பட்டுப் பின்னர் அது, அதற்கான இடத்தில்[அறுந்து விழுந்த ஆணுறுப்பு இருந்த இடம்] பொருத்தப்பட்டது. அதற்காக அவர் ஆறு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்தார்.
தொற்றுநோயின் தொல்லை இருந்தும்கூட, லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையில், ஒன்பது மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
"கையில் ஆறு வருடங்களாக ஆணுறுப்பு ஆடிக்கொண்டிருந்ததை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இது ஒரு கனவு போல" என்கிறார் மால்கம் மெக்டொனால்ட்.
இன்னும் ஓர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுமாம். அவர் உடலுறவு கொள்ள ஸ்க்ரோட்டத்தில்[The scrotum is a male reproductive structure located under the penis] ஒரு பம்ப் இணைக்கப்பட உள்ளதாம்.
அரியதும் அதிசயமானதுமான இந்தச் சாதனையை நிகழ்த்திய மருத்துவ அறிஞர்களுக்கு நம் பாராட்டுகள்!
இழந்த பழைய ஆணுறுப்புக்கு மாற்றாகப் 'புத்த்த்த்தம் புதிதாக' ஒன்றைப் பெற்ற மால்கம் மெக்டொனால்ட்டுக்கு நம் வாழ்த்துகள்!!
*** அயல்நாட்டுக்காரன், புதிதாய் ஓர் உறுப்பை உருவாக்கி, கையில் வளர்த்து, உரிய இடத்தில் பொருத்தி அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறான். நாமோ கற்பனையில் உருவாக்கப்பட்ட சாமிகளின் ஆண் பெண் உறுப்புகளுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் நடத்தி, கூத்தாடிக் கும்பிட்டு கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
திருந்துவது எப்போது?
* * * * *
தொடர்புடைய செய்தி:
மேற்கண்டது போலவே, புற்று நோயால் மூக்கை இழந்த ஒரு பெண்ணின் கையில், புதிதாக உருவாக்கிய மூக்கைப் பொருத்தி வளர்த்து, பழைய மூக்கு அகற்றப்பட்ட இடத்திலேயே மருத்துவ அறிஞர்கள், அறுவை மூலம் அதைப் பொருத்தியுள்ளார்கள். ஆதாரம் கீழே.
https://www.mirror.co.uk/news/world-news/woman-50-grows-miraculous-new-28471328
===========================================================================
குறிப்பு:
இது பழைய செய்திதான்[மே,2022] எனினும், கணிசமானவர்களேனும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இன்று பதிவு செய்யப்பட்டது.