ஆசியாவில் முதன் முறையாக அரியவகை நோயான ‘மோயா மோயா’ நோய் பாதிப்புள்ள இரட்டைக் குழந்தைகளுக்குச் சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை தரமணியில் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு நெதர்லாந்தைச் சேர்ந்த 8வயதான இரட்டைக் குழந்தைகளுக்கு வலது கை, மற்றும காலில் வெட்டி இழுக்கும் நகர்வுகள் இருந்தன.
இதனைப் பரிசோதித்தபோது, அரிய வகை நோயான ‘மோயா மோயா’ என்ற நோய் இருந்தது கண்டறியப்பட்டது.
இதற்கு மருத்து, மாத்திரை இல்லாத நிலையில்.....
அறுவைச் சிகிச்சை மட்டுமே தீர்வு என்ற அடிப்படையில், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, இந்த இரு குழந்தைகளுக்கும் அறுவைச் சிகிச்சையை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் மேற்கொண்டது.
‘மருத்துவர்
பேஷ் குமார்’ தலைமையிலான மருத்துவக்குழு 6 மணி நேர அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தது.
தற்போது இரட்டைக் குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளனர்.
இந்தச் சிகிச்சையை, முன் கூட்டியே வெற்றிகரமாகச் செய்ததாகத் தரவுகள் இல்லாத நிலையில் ஆசியாவில் முதற்முறையாக அப்போலோவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
=================================================================================