உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம். ஜோசப், ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக 18.11.2022இல் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மனுதாரராக வாதாடிய முதியவர் சங்கர் லால் சர்மா என்பவர், பல நீதிமன்றப் படிகளேறிவிட்டதாகவும் எங்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்பதாகவும் சொன்னதோடு தமது வாதங்களையும் இந்தியில் முன்வைத்தார்.
உச்சநீதிமன்றத்தில் இந்தியில் வாதாடிய அந்த நபரிடம், வழக்காடு மொழி ஆங்கிலம்தான் என அழுத்தம் திருத்தமாக நீதிபதிகள் சொன்னார்கள்.
நீதிபதிகள் ஆங்கிலத்தில் சொன்னதுகூடத் தமக்குப் புரியாததுபோல் பாவனை செய்தார் அந்த வக்கீல்.
அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான், நீதிபதிகள் இந்தியில் புரியவில்லை என்று கூறியதை மொழிபெயர்த்துச் சங்கர் லால் சர்மாவிடம் தெரிவிக்க வேண்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியில் வாதாடிய மனுதாரருக்கு உதவ வழக்கறிஞரை நியமித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
இங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால்.....
உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் தொழிலைச் செய்கிற ஒரு வழக்குரைஞருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதுதான்.
ஒருவேளை, ஆங்கிலத்தில் சரளமாக் உரையாடும் ஆற்றல் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், “இந்தி புரியவில்லை” என்று நீதிபதிகள் சொன்னதுகூட அவருக்குப் புரியவில்லை என்பதுதான் நம்மைச் சந்தேகப்பட வைக்கிறது.