பக்கங்கள்

ஞாயிறு, 20 நவம்பர், 2022

கருவில் இருக்கும் குழந்தைக்குப் பக்கவாதமா? அடக் கடவுளே!!!


கருவில் இருக்கும் குழந்தைக்குத் தாயின் ஆரோக்கியம்தான் ஆதாரச் சக்தி.

தாய்க்கு ரத்தச்சோகை, தைராய்டுக் குறைபாடு இருப்பது, குழந்தையின் இதயக் குழாய் அல்லது இதயத்தின் வடிவமைப்பு சரியாக அமையாமல் போவது, தொப்புள்கொடியானது குழந்தையின் கழுத்துப் பகுதியைச் சுற்றி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் கருவில் இருக்கும் குழந்தைக்குப் பக்கவாதம் ஏற்படும்.

சில சமயங்களில், கருவுற்ற தாய் ஒரு விபத்தைச் சந்தித்தாலோ காயமடைந்தாலோ, அவைகூடக் காரணமாக அமையும்.


தாய்க்கு ‘இதயக் குழாய்ப் பாதிப்பு’ ஏற்பட்டிருப்பதும், கருவிலிருக்கும் குழந்தையைப் பக்கவாதம் தாக்குவதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.


மேற்கண்ட குறைபாடுகளின் மூலம் கருவில் இருக்கும் குழந்தைக்கான இந்தப் பக்கவாதப் பாதிப்பைக் கண்டறியலாம்.


ஆனால்,


அதனை முழுமையாகக் குணப்படுத்துவது என்பது தற்போது சாத்தியமில்லை.


காரணம், ஒரு சில நேரங்களில், குழந்தை பிறந்த சில மாதங்கள் கழித்துத்தான் பக்கவாதம் இருப்பதையே அறியமுடியும் என்பதுதான்.


ஆனாலும், பேறுகாலத்தில் தாயின் உடல்நலம் பேணுவதன் மூலம், கருவில் இருக்கும் குழந்தைக்குப் பக்கவாதம் ஏற்படாமல் தடுத்திட முடியும் என்பது ஆறுதல் அளிக்கும் நல்ல தகவலாகும்.

========================================================================

 https://www.bbc.com/tamil/science-63427204