ஆணுக்குப் பாலியல் இச்சையைத் தூண்டி, உடலுறவு கொள்ள அவனை நாயாய்ப் பேயாய் அலையவிடுவது டெஸ்டோஸ்டிரான் என்னும் இந்தப் பொல்லாத ஹார்மோன்[இயக்குநீர்]தான்.
இதைச் சுரப்பவை விந்தகத்தில் உள்ள கோடிக் கணக்கான லேடிக்(Leydig) செல்கள்.
டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகமானால் கருமாந்தர காம இச்சை அதிகமாகும். அது குறைந்தால் இந்த இச்சையும் குறையும்.
இது சில மனிதர்களின் உடம்பில் அளவு கடந்து சுரப்பதுண்டு. அதன் விளைவாகத்தான் அவர்கள்[மனப்பக்குவமும் இல்லாததால்] சின்னஞ்சிறுகள், கிழவிகள் என்று வித்தியாசம் பாராமல் வன்புணர்வில் ஈடுபடுகிறார்கள்.
வரம்பில்லாமல் இந்த ஹார்மோன் சுரப்பதைத் தடுத்தால், இவ்வகைக் குற்றம் புரிவோரின் எண்ணிக்கையைக் குறைக்க இயலும்.
இதற்கான வழி ஏதும் இன்று இல்லை; அன்றும் இல்லை..
இதனால்தான், வன்புணர்வில் ஈடுபடுவோரைத் தண்டிக்க உலக அளவில் அவர்களின் விரைகளை அடியோடு துண்டித்துவிடும் வழக்கம் பரவலாக இருந்தது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இது வரலாறு[இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். விரிவான தகவல் தொகுப்பு பின்னர் வெளியாகும்].
குற்றவாளிகளைத் தண்டிக்க இந்தத் ’துண்டிப்பு’ பயன்பாட்டில் இருந்ததே[அரபு நாடுகளில் இன்று நடைமுறையில் உள்ளதா?] தவிர, தனிப்பட்ட முறையில் ஆண்கள்[கருத்தடை அறுவை[வாசக்டமி] செய்துகொள்வதைப் போல] இதைச் செய்துகொண்டதில்லை என்றே சொல்லலாம்.
இனி எதிர்காலத்தில்…..
திருமணமாகி, மனைவியின் நடத்தையைச் சந்தேகப்பட்டுக் கொலை செய்து தண்டனை[ஆயுள், தூக்கு] பெறுவது; மனைவியால் கள்ளக் காதலன் துணையுடன் தீர்த்துக்கட்டப்படுவது போன்ற கொடூரங்களைக் கண்டு கண்டு கண்டு, கேட்டுக் கேட்டுக் கேட்டு மிரண்டுபோய்….
”கல்யாணம் வேண்டாம்; காம சுகமும் வேண்டாம். உயிருள்ளவரை உண்டு உறங்கி இந்த மண்ணில் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் காலங்கழிக்கும் சுகமே போதும்” என்று முடிவெடுத்துத் தன்னிச்சையாய் மருத்துவமனை சென்று ஆண்கள் விரைகளை அகற்றிக்கொள்ளும் காலமும் வரக்கூடுமோ?!
ஹி... ஹி... ஹி!!!
=========================================================================