புதன், 23 நவம்பர், 2022

பாடாய்ப் படுத்தும் விரை நோய்கள்!

'விரை'ப்பை வலிக்கிறது என்றால் அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவையாவன:

விதை முறுக்கு [Testicular Torsion]: 

விதைக்கு  இரத்தத்தைக் கொண்டுவரும் விந்தணுத் தண்டு முறுக்குக்கொள்ளுதல். இது, விதை ‘முறுக்கு நோய்’ எனப்படும்.

இதனால் ஒரு பக்க விரையில் கடுமையான திடீர்  வலி தோன்றும். விரையைப் பாதுகாப்பாகச் சுமந்துகொண்டிருக்கும் [விதைப்]பையிலும் வலி உண்டாகும்.. வயிற்றுவலி தோன்றும்.

6 மணி நேரத்துக்குள் சிகிச்சை எடுக்காவிட்டால் விதையை இழக்க நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


விரை அழற்சி [Epididymo-orchitis]:

ஒவ்வொரு விரைக்குப் பின்புறத்திலும் சுருளாக அமைந்த  குழாய்க்குப் பெயர் விரைச் சுருட்டுக்குழாய். விந்தணுக்களைச் சேமித்து வைப்பதும் கொண்டுசெல்வதும் இதன் வேலைகள். 

இதில் உண்டாகும் அழற்சியால் கடுமையான வலி ஏற்படும்; சிறுநீர்த் தொற்று உண்டாகலாம்; காய்ச்சல் வரக்கூடும்.


விரையில் நீர்க் கோர்வை [Hydrocele]:

விரையைச் சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரந்துகொள்வதுண்டு.

இதனால் விரை வீங்கும்; வலி தெரியும்.


விரை நாள வீக்கம்[Varicocele]:

இடது விரைப்பையில் மந்தமான வலி; பிடித்து இழுப்பது போலவும், உள்ளே புழுக்கள் நெளிவது போலவும் இருக்கும். நிற்கும்போது விரை வீக்கம் அதிகமாகும். படுத்தால் குறையும். இருமினால், அழுதால், தும்மினால், அல்லது அடிவயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால், வீக்கம் பெரியதாகும்


விரைப் புற்றுநோய் [Tumour]:

விரைப்பையில் கடினமான திரண்ட கட்டிகள் தோன்றுதல். விரைகளின் வடிவம், அளவு ஆகியவற்றில் வேறுபாடுகள் தெரியும்.

இவ்வாறாக, விரிப்பை வலிப்பதற்கும், வீங்குவதற்கும் பல காரணங்கள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. தேவைபட்டால் ultra Sound Scan செய்துபார்க்கலாம்.

===========================================================================

https://doctortamil.com