திங்கள், 28 நவம்பர், 2022

புற்றுநோயில் இத்தனை வகைகளா!?!?!


சாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும் அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்போது உருவாவது புற்றுநோய்.

இது உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும்.

2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகள் இதனால் நேர்ந்துள்ளது என்று WHO தெரிவித்துள்ளது. 

மருந்துகளுக்குக் கட்டுப்பட்டு, மருந்தை நிறுத்தும்போது உடம்பு வலி தொடருமேயானால், அதுவும் புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.

இவ்வகைப் புற்றுநோயின் வகைகள்:

1.மூளைக் கட்டிப் புற்றுநோய்:

"தொடர்ச்சியான தலைவலி, மயக்கம், சுயநினைவு இழப்பு மற்றும் உணர்திறன் அல்லது கைகள் மற்றும் கால்களில் சக்தி இழப்பு போன்றவை. 

2.தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்கள்:

வாயில் புண், கழுத்தில் கட்டி, குரல் கரகரப்பு, வாய் அல்லது மூக்கில் இரத்தம் வருதல் என்றிவை இதன் அற்குறிகளாகும். 

3.நுரையீரல் புற்றுநோய்: அறிகுறிகளாவன:

தொடர்ந்து இருமல், இருமலில் ரத்தம் வெளியேறுதல். மூச்சுத் திணறல், மார்பு வலி.

4.மார்பகப் புற்றுநோய் அறிகுறிகள்:

"பெண் அல்லது ஆணின் மார்பகத்தில் ஏதேனும் கட்டி, முலைக்காம்பு வெளியேற்றம், தோல் அமைப்பில் மாற்றம், அக்குள் கட்டி ஆகியவை மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்" என்கிறார்கள் டாக்டர்கள்.

5.வயிற்றுப் புற்றுநோய்: 

விழுங்கும் போது சிரமம் அல்லது வலி, விவரிக்க முடியாத எடை இழப்பு, பலவீனம் அல்லது சோம்பல், உணவுக்குப் பிறகு உணவுக் குழாயில் விக்கம் ஆகியன இதன் அரிகுறிகள்.

6.கல்லீரல் அல்லது பித்தப்பைப் புற்றுநோய் அறிகுறிகள்:

வயிற்று வலி, பசியின்மை, அதிகரித்த அமிலத்தன்மை, அடிவயிற்றில் ஏதேனும் கட்டி, கல்லீரல் & மண்ணீரல் அளவு அதிகரிப்பது போன்றவை.

7.பெருங்குடல் புற்றுநோய்:

இதன் அறிகுறிகளாவன….. 

மலம் கழிப்பதில் சிரமம், மலத்தில் இரத்தம் வருதல் முதலானவை.

8.புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் அறிகுறிகள்:

"சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் அல்லது அடைப்பு ஏற்படுவது, வலியின்றி சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஆகியன.

9.ரத்தப் புற்றுநோய்:

"அதிகரிக்கும் சோர்வு, விவரிக்க முடியாத காய்ச்சல் அல்லது ஹீமோகுளோபின் இழப்பு, எடை இழப்பு, வெள்ளை அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகளின் அதிகரிப்பு ஆகியவை இதன் அறிகுறிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

***மேற்கண்டவற்றில் எந்தவொரு அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது மிக மிக முக்கியம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக