வியாழன், 17 நவம்பர், 2022

ஒரு ‘சோக’ நிகழ்வும் ‘சுர்ர்ர்ர்ர்ரீஈஈஈஈஈர்’ பின்னூட்டங்களூம்!!!

‘ராஜீவ் வெடித்து சிதறியதை கண்ணால் பார்த்துவிட்டு எஸ்கேப்பான A1 நளினி..’

இந்தத் தலைப்பின் கீழ்,


https://tamil.oneindia.com/news/chennai/supreme-court-verdict-and-nalini-s-role-in-assassination-of-rajiv-gandhi-485623.html#vuukle-comments இல் ஒரு செய்தி  [November 17, 2022]வெளியானது. அதில் பதிவாகியிருந்த பின்னூட்டங்களுக்கான பட்டியல் கீழே:

பின்னூட்டங்கள்:

Varadha34m

Proud of you nalinj

KUTTY2h

வினை விதைத்தவன் வினை அறுத்தான். பழி வாங்கிய படலம் இது . இந்திய அமைதிப் படை இலங்கையில் நடத்திய காட்டுமிராண்டித் தனத்திற்குத் தலைமை தங்கியதால் ராஜிவ் காந்தி விடுதலைப் புலிகளால் பழி வாங்கப்பட்டார். இது, இந்தச் சரித்திர நிகழ்வின் மூலம் புரிந்துகொள்ளப்படும் நியதி. வினை விதைப்பவன் வினை அறுப்பான். நன்மை ஒன்று செய்தால் நன்மை விளையும். தீமை ஒன்று செய்தால் தீமை விளையும். பதவியும் அதிகாரமும் இருக்கிறதிற்காக ஆட்டம் போட்டால் இதுதான் கதி. ராஜிவ் காந்தி படுகொலை உணர்த்தும் நியதி இது. ராஜிவ் படுகொலை அநியாயம் என்றால், இந்திய அமைதிப் படை இலங்கையில் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்குப் பெயர் என்ன? இது பழி வாங்கிய படலம் . அது சரி என்றால் இதுவும் சரி. அது தவறு என்றால் இதுவும் தவறுதான் .

Hari4h

இவ்வளவு பேசுதே நீதிமன்றம், வேலுசாமி, சுப்ரமணிய சாமியை விசாரிக்கணும்னு சொல்றாரு. 30 வருஷம் ஏன் நீதிமன்றம் பண்ணல? ராஜீவ் காந்தினால அங்க ஈழத்துல அப்பாவி மக்களை இந்திய ராணுவம் சாகடிச்சதற்கு ஒருத்தனும் வாயைத் திறக்கலை. அவங்க அம்மா இந்திரா பண்ண மாதிரில பிரிச்சுகொடுத்து இருக்கணும்... பகுளாதேஷ் மாதிரி. தப்பா நெனச்சா இப்படித்தான் போகணும்.

N PALANISAMY5h

கொத்துவெடியில் உடல் சிதறி 1,50,000 இலங்கைத் தமிழர்கள் செத்துக்கிடந்தார்களே, அது நினைவுக்கு வந்ததா???

மாறன்N PALANISAMY1h: அது ஒரு மகா குற்றம். இதுவும் ஒரு குற்றம்thaan.

சிவபெருமான்5h

ஒருவர் சம்பவ இடத்தில் இருந்தால் அவர்தான் குற்றவாளி என்று முடிவு செய்வது ஒன்றும் புதிதல்ல. சம்பவ இடத்தில் சும்மா இருப்பவர் எதிரி எண் ஒன்று என்று கூறுவது கேலிக்கூத்து. பெருச்சாளிகளை விட்டுவிட்டு எறும்புகளைக் கைது செய்வது போலத்தான் இதுவும். சந்திராசாமி, சுப்பிரமணியசாமியை விசாரிக்கவே இல்லை.

காவித் தீவிரவாதிகள் இனிப்பேசிப் பயனில்லை. எழுவரும் விடுதலை செய்யப்பட்டாயிற்று. காங்கிரஸ்காரர்கள் மற்றும் காவித் தீவிரவாதிகள் சும்மா முக்க வேண்டியதுதான். ஒன்றும் பண்ண முடியாது. முடிந்தால் ஜீயின் அண்ணாமலத்தை விடுதலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் இருக்கச்சொல்லுங்கள்.

NAIDU6h

Politicians will erect statue for nalini soon..

மாறன்NAIDU1h

செஞ்சாலும் செய்வார்கள். தமிழ் நாட்டு மக்கள் புத்தி ரொம்ப மழுங்கிவிட்டது.

deva6h

// இதனடிப்படையில் யாரோ ஒரு தலைவரைக் கொலை செய்யப் போகிறார்கள் என்கிற உள்ளுணர்வு நளினிக்கு ஏற்பட்டது.//

அழகான திரைக்கதை.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்ளுணர்வு ஏற்பட்டது என்று எப்படி இவர்கள் கண்டுபிடித்தார்கள்?

இது குறித்து, பழ.நெடுமாறன் அவர்கள் இப்போது வெளியிட்டிருக்கும் நீண்ட அறிக்கையைப் படித்துப் பாருங்கள்.

கொலையாளி சிவராசன் நளியைச் சந்தித்ததை விசாரித்த இந்திய விசாரணை அமைப்புகள், ராஜீவைப் படுகொலை செய்துவிட்டு சுப்பிரமணியசாமியின் குருவான சந்திராசாமியை இரண்டு முறை டெல்லியில் சந்தித்ததை ஏன் விசாரிக்க மறுத்தார்கள்? இந்தியாவின் முன்னாள் பிரதமரைக் கொலை செய்த சர்வதேசத் தொடர்பை மறைக்க, ஏதோ சென்னையில் வசிக்கும் நாலு சின்னப் பசங்க சேர்ந்து கொன்னுட்டாங்கங்கிற மாதிரி கதையை முடித்து விட்டார்கள்!

========================================================================