வெள்ளி, 2 டிசம்பர், 2022

“40 வயதில் திருமணம் புரியும் இந்துப் பெண்கள்”... வருந்தும் முஸ்லீம் பிரமுகர்!!!

AIUDF தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல் பத்ருதீன் அஜ்மல், ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

“முஸ்லீம் பையன்கள் 21-22 வயதிலும், பெண்கள் 18 வயதிலும் திருமணம் செய்துகொள்கிறார்கள், ஆனால், இந்துப் பெண்கள் 40 வயதுவரை திருமணம் செய்துகொள்வதில்லை. 40க்குப் பிறகே பெற்றோர் தரும் அழுத்தத்தால் மணம் புரிகிறார்கள்” என்று கூறியதோடு, “அப்புறம் எப்படி இந்துக்களின் தொகை அதிகரிக்கும்” என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறார்.

இந்தக் கேள்வி, ’முஸ்லீம்கள் கருத்தடை செய்யாமலும், இரண்டு மூன்று திருமணங்கள் செய்தும் தங்களின் தொகையை அதிகரிக்கிறார்கள்’ என்னும் இந்து அமைப்புகளுக்கு இவர் தரும் பதிலாகவும் உள்ளது.

இளம் வயதில் மணம்புரிவதே ஏற்றது என்பதை, “வளமான மண்ணில் விதையை விதைத்தால்தான் அது பலன் தரும்” என்று இவர் சொல்லியிருப்பது ரசிக்கத்தக்கது.

“இந்துக்களில் விவாகரத்து விகிதம் அதிகமாக உள்ளது” என்று இவர் சுட்டிக்காட்டியிருப்பதும் கவனிக்கத்தக்கதே.

ஆனால், தங்களின் தொகையைப் பெருக்கிக்கொண்டிருப்பதோடு, இந்துக்களையும் அதைச் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பது சரியா என்னும் கேள்வியும் எழாமல் இல்லை.

'தாமதமாகத் திருமணம் செய்வதால் சட்டவிரோத உறவுகளை இந்துப் பெண்கள் மேற்கொள்கிறார்கள்’ என்றும் சொல்லியிருப்பது எங்கோ நெருடுகிறது.

இவர் வேறு எதையோ சொல்ல நினைத்து இப்படிச் சொல்லிவிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இவர் பேட்டிக்கு இந்துக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்?

அதை ஊடகச் செய்திகள்[இச்செய்தி வெளியாகி 2 மணி நேரம் போல் ஆகிறது] மூலம் அறியலாம்.

===================================================================

https://www.msn.com/en-in/autos/news/watch-hindus-keep-illegal-relations-till-40-they-should-get-their-girls-married-at-18-20-years-says-aiudf-president-badruddin-ajmal/ar-AA14P2CW?ocid=msedgdhp&pc=U531&cvid=17694c0d69ed4405a0364b2e3f532c8a